Chandralekha Serial: பிக் பாஸ் வனிதா விஜயகுமார் சந்திரா வீட்டுக்கு போறாங்களாம்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 3 யின் பரபரப்பு ஹவுஸ் மேட்டாக இருந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் இல்லமால் பிக்பாஸ் சீசன் 3 அவ்வளவு களைக்கட்டி இருக்காது என்று சொல்லலாம்.
இவருக்கு சினிமா வரவேற்பு கொடுப்பதற்குள் சின்னத்திரை வரவேற்பு கொடுத்து இருக்கிறது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வந்தன.
அதற்குள் முந்திக் கொண்டது சன் டிவி. தினமும் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் வனிதா நடிக்கப் போகிறார் போலும்.

சன் டிவி சீரியல்
கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக சன் டிவியில் சந்திரலேகா சீரியல் பிற்பகலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில்தான் நடிக்க உள்ளார் வனிதா விஜயகுமார். மேம் எவ்வளவோ பிரச்னையை பார்த்துட்டீங்க.இப்போ என்ன பிரச்சனைன்னு கேட்கறாங்க... இப்போ சந்திரா வீட்டுக்கு போகப்போறோம்னு சொல்றாங்க.,

என்ன பிரச்சனை?
அங்கே என்ன பிரச்சனைன்னு கேட்க, இனிமேல்தான் பிரச்சனை என்று சொல்கிறார் வனிதா. அதாவது சந்திரலேகா சீரியலில் வனிதா நடிக்கப் போகிறார். கெஸ்ட் ரோலா நிரந்தரமான ரோலான்னு இனிதான் தெரிய வரும்.

சந்திரலேகா படம்
வனிதா விஜயகுமார் நடிச்ச முதல் படமும் சந்திரலேகா படம்தான். இதில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிச்சு இருப்பார். அப்போது 8 ம் வகுப்புத்தான் பிடிச்சுக்கொண்டு இருந்தாராம் வனிதா. ஷாட் முடிஞ்சதும் ரூமுக்கு வந்த தளபதி எங்கே உன் அக்கான்னு கேட்டாராம்.

நான்தான் நடிச்சேன்
அக்காவான்னு வனிதா கேட்க..ஆமா என்கூட நடிச்சுதே அந்த பொண்ணுன்னு சொன்னாராம். உங்க கூட நடிச்சது நான்தான்னு சொன்னாராம் வனிதா.நீயா என்ன படிக்கறேன்னு கேட்டபோது 8ம் கிளாஸ்னு சொல்லி இருக்கார்.அடப்பாவிங்களா சின்னப்பொண்ணை கூட்டிகிட்டு வந்துட்டீங்களான்னு சொன்னாராம்.


Click it and Unblock the Notifications
