Run serial: ரன் கிருஷ்ணாவுக்கு சாயாசிங் நல்ல ஜோடிதான்...!
சென்னை: சன் டிவியின் ரன் சீரியலின் ஹீரோ கிருஷ்ணாவுக்கு சாயாசிங் ஹீரோயினாகவும் நல்ல ஜோடியாகத்தான் இருக்கிறார்.
விகடன் டெலிவிஸ்ட்டாஸ் தயாரிப்பில் உருவாகி சன் டிவியில் இரவு 10 மணிக்கு ரன் சீரியல் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிருஷ்ணா சக்தியாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடி திவ்யாவாக நடித்து வந்த சரண்யா விலகிக் கொண்டதால் விகடன் டெலிவிஸ்டாஸ் நல்லதொரு முடிவாக கிருஷ்ணாவின் மனைவி சாயாசிங்கையே திவ்யாவாக நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

சாயாசிங் நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷின் ஜோடியாக திருடா திருடி படத்தில் அறிமுகம் ஆனவர் சாயாசிங். மன்மதராசா பாடல் டான்ஸ் மூலம் இளைஞர்கள் மனதைக் கவர்ந்த சாயாசிங்குக்கு வாய்ப்புக்கள் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. தளபதி நடித்து வெளிவந்த திருப்பாச்சி படத்தில் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா பாடல் மூலமும் பிரபலம் ஆனார்.

கிருஷ்ணாவுடன் படத்தில்
கிருஷ்ணாவுடன் ஜோடியாக இல்லை என்றாலும் ஆனந்தபுரத்து வீடு படத்தில் தனது ஜோடியின் நண்பராக நடித்த கிருஷ்ணாவுடன் சாயாசிங்குக்கு காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பு பக்கம் தலை காண்பிக்காமல் இருந்தார் சாயா சிங்.

அமையவில்லை என்று
கிருஷ்ணாவுக்கு தெய்வமகள் சீரியல் போல ரன் சரியான சீரியலாக இப்போது அமைந்து இருக்கிறது. தெய்வமகள் வாணிபோஜன் மாதிரி நல்லதொரு ஜோடியாகத்தான் சரண்யாவும் அமைந்து இருந்தார். அவர் வேறு சீரியலுக்கு சென்றுவிட சரியான ஜோடியை உடனடியாகத் தேடுவதில் சிக்கல்தான் இருந்தது சீரியல் குழுவினருக்கு.

ரீல் ஜோடியைவிட
கிருஷ்ணாவின் ரியல் ஜோடியே சிக்கென்று இன்னும் ஸ்லிம்மாக திருமணம் ஆகாத பெண் போல இருக்கையில் எதற்கு வேறு ஜோடி தேட வேண்டும் என்று முடிவு செய்து இருப்பார்கள் போலும். கிருஷ்ணாவின் ரியல் ஜோடியையே திவ்யாவாக நடிக்க வைத்துள்ளார்கள். நல்லாத்தான் இருக்கு. திவ்யாவாக நன்றாகவே நடித்து இருக்கார் சாயாசிங்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications