சன் டிவிக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது! விஜய் டிவியை விட்டு போனது நஷ்டம்! வெங்கடேஷ் பட் ஓப்பன்
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார். ஆனால் தனக்கும் சன் டிவிக்கும் சம்மதம் கிடையாது என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் வெங்கடேஷ் பட் 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளில் சமையல் செய்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் . சட்டு புட்டுனு சமையல் செய்வது எப்படி என்று இவரிடம் கற்றுக் கொள்ளலாம்.

அந்த அளவிற்கு எளிமையான சமையல் முதல் கடினமான சமையல்கள் வரை அனைத்தையும் படபடவென இவர் செய்யும் ஸ்டைல் பலருக்கும் பேவரைட் இவர் சொல்லித் தரும் அழகைப் பார்த்து பலர் சமைக்கிறார்களோ இல்லையோ இவர் வைக்கும் டிஷ்ஸின் வித்தியாசமான பெயரை பார்ப்பதற்காகவே இவர் சமைக்கும் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம். அந்த நேரத்தில் தான் வெங்கடேஷ் பட்க்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி கிடைத்தது.
இதில் முதல் சீசனிலிருந்து நான்கு சீசன்களாக நடுவராக பெரிய அளவில் மக்கள் மத்தியில் கலக்கிவிட்டார். ஆரம்பத்தில் இவர் யார் என்று பெரிய அளவில் மக்களுக்கு தெரியாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் மற்றும் காமெடிகள் பலருக்கும் பிடித்திருக்கும். இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் ஐந்தாவது சீசனில் இருந்து தான் விலகப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது சன் டிவியில் வரும் மே 19ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணனோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கடேஷ் பட் பேசுகையில், எனக்கும் சன் டிவிக்கும் சம்பந்தமே கிடையாது. நான் 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் தான் இருந்தேன்.
அதற்கு முக்கிய காரணமாக மீடியா மேசன் நிறுவனம் இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் மீடியா மேசன் விஜய் டிவியில் இருந்து வெளியேறும் போது நானும் அவர்களோடு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. காரணம் எனக்கு அவர்களிடம் தான் முழுமையான சுதந்திரம் கிடைக்கிறது. அதனால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நானும் வந்து விட்டேன். ஆனால் இதில் சன் டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.
சிலர் இணையத்தில் விஜய் டிவியை விட சன் டிவியில் தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் அதனால் வெங்கடேஷ் பட் வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. விஜய் டிவியில் நான் இருக்கும் போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எனக்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாள் எபிசோடுகள் இருப்பதால் தொடர்ச்சியாக 40 நாட்கள் சூட்டிங் இருக்கும்.
பிறகு சில நாட்கள் விடுமுறை இருக்கும் அடுத்தது மீண்டும் சூட்டிங் தொடங்கி விடும். அப்போ 40 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வரும் என்று கூட்டி கழித்து பார்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் எபிசோடு ஒளிபரப்பாக போகிறது. அதனால் எனக்கு 20 எபிசோடுகள் தான் சூட்டிங் இருக்கிறது. அப்போ எங்கே அதிக சம்பளம் கிடைக்கும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
அதுபோல எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதோடு அவர்களிடம் நான் யார் என்று கேட்டால் கூட தெரியுமா என்று தெரியவில்லை. மீடியா மெஷன் நிறுவனம் தான் என்னை வைத்து இந்தநிகழ்ச்சி நடத்துகிறார்கள் அவ்வளவுதான் என்று வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications