ஆரம்பிக்கலாமா! வெங்கடேஷ் பட் போட்ட பூடக இன்ஸ்டா பதிவு! ஒரு வேளை கேட்டரிங் காலேஜா இருக்குமோ?
சென்னை: ஆரம்பிக்கலாமா என குக் வித் கோமாளி புகழ் செஃப் வெங்டேஷ் பட் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் புதிய நிகழ்ச்சியில் ஏதேனும் கலந்து கொண்டுள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அக்கார்டு ஹோட்டலில் சிஇஓவாக இருப்பவர் வெங்கடேஷ் பட். இவர் விஜய் டிவியில் சமையல் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதயம் தொட்ட சமையல் சமையல் நிகழ்ச்சி மூலமும் பிரபலமடைந்தார். தனது யூடியூப் சேனலில் நிறைய எளிய சமையல் குறிப்புகளை கொடுத்து வருகிறார். கலந்த சாதம், சைட் டிஷ் உள்ளிட்டவைகளையும் செய்து காட்டுவார்.
இவர் அசைவ உணவை உண்ண மாட்டார். ஆனால் சமைப்பார், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சமைக்கும் அசைவ உணவை நுகர்ந்து பார்த்தே அதில் உள்ள நிறை குறைகளை சொல்லிவிடுவார். இவர் ஆசான் மெமோரியலில் கேட்டரிங் படித்தவர். பிறகு சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருந்தார்.
1994 ஆம் ஆண்டு ஹோட்டல் சோழா ஷெரட்டனில் பட் , தனது பணியை தொடங்கினாரம். இதையடுத்து பெங்களூரில் உள்ள லீலா பேலஸில் 2001 ஆம் ஆண்டு பணியாற்றினார். இதையடுத்து ஊட்டி, புதுவையில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டனில் பட் தற்போது சிஇஓவாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் செஃப் தாமோதரனுடன் இணைந்து குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டார். இதுவரை 4 சீசன்களை கடந்துள்ளது இந்த நிகழ்ச்சி. இதில் புகழ், பாலாவுடன் வெங்கடேஷ் பட் அடிக்கும் லூட்டியை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வரும். அதே நேரத்தில் தனது பணியிலும் கவனமாக இருந்து நடுவராக செயல்பட்டு வந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவராலும் விரும்பப்பட்டது என்பதால் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5யிலிருந்து வெங்கடேஷ் பட் விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்கிறார். இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட், ஆரம்பிக்கலாமா என கூறி ஜெயிலர் படத்தில் வரும் அலப்பறை கிளப்புறோம், தலைவரு நிரந்தரோம் என்ற பாடல் பேக்கிரவுண்டில் ஒலித்து வருகிறது. வெங்கடேஷ் பட் ஏதேனும் புதிய நிகழ்ச்சியை நடத்துகிறாரா, அதற்கான வீடியோவா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த இன்ஸ்டா போஸ்ட்டில் அனைவரும் "உங்களை குக் வித் கோமாளியில் ரொம்ப மிஸ் செய்றோம். ஒரு வேளை நம்ம பட்டுக்குட்டி கேட்டரிங் காலேஜ் ஆரம்பிக்கிறாரா " என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் "நீங்கள் இல்லாமல் குக் வித் கோமாளி ஷோ நன்றாகவே இருக்காதே, நாங்கள் எப்படி பார்ப்போம்" என கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் "ஒரு வேளை பட் மீண்டும் குக் வித் கோமாளிக்கே வருகிறாரா" என்றும் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications