ஈசிஆர் ரிசார்ட்டில் விடிய விடிய விருந்து.. நடிகரா இப்படி? கயல் சீரியல் ஐயப்பனுக்கு 2 ஐடியா: பிரபலம்
சென்னை: 3 வருஷமா ஐயப்பன் வீட்டிற்கு காசு தருவதில்லை.. குழந்தையையும் கவனிப்பதில்லை.. 2 மாதமாக வீட்டுக்கும் வருவதில்லை.. நான் கையெடுத்து கும்பிடுறேன். இந்த கயல் சீரியல் வேண்டாம். அவரை இந்த சீரியலிலிருந்து எடுத்துருங்க. இந்த சீரியலால் என் வாழ்க்கையே போயிடுச்சு. நாங்க என்ன வேலை செய்து பிழைத்து கொள்வோம்" என்று கயல் சீரியல் நடிகர் ஐயப்பனின் மனைவி பரபர குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்நிலையில், ஐயப்பன் குறித்து பத்திரிகையாளர் பாண்டியன் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "கயல் சீரியல் வந்தபிறகு, தமிழகம் முழுக்க அறியப்பட்ட நபராக மாறிவிட்டார் நடிகர் ஐயப்பன்..

ஈசிஆர் ரிசார்ட்கள்
பொதுவாக பல சினிமா நடிகர்களுக்கு, நிறைய புகழ், நிறைய பணம் வந்ததுமே, நண்பிகள், ஈசிஆரில் ரிசார்ட்களில் இரவு விருந்து என்பது அதிகரித்துவிடும்.. திரைப்பட துறையில் இருப்பவர்களுக்கு மட்டும், எப்போதுமே இரவில் ஒரு முறைமுக வாழ்க்கை இருக்கும்.
மதுவிருந்துகள் மட்டுமல்ல, ராஜபோதை விருந்தும் இருக்கும்.. அதாவது, கோகைன், கஞ்சா, போன்ற போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக காணப்படும்.. "திரைப்பட நடிகர்களின் இரவு விருந்தில், போதை பொருட்களை தங்கத்தட்டில் வைத்து தந்து உபசரிப்பார்கள்.. அதை நானே பலமுறை கண்ணால் பார்த்திருக்கிறேன்" என்று சுசி லீக்ஸில் சொல்லப்பட்டுள்ளது.
இரவு விருந்துகள்
இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்தவிதமான எதிர்ப்பும் யாருமே தெரிவிக்கவில்லை.. மகாராஷ்டிராவில், சஞ்சய் தத் என்ற மிகப்பெரிய நடிகர் சிறையில் அடைக்கப்பட்டார்.. அதேபோல கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக ஷாருக்கான் மகனையும் கைது செய்தார்கள்.. இப்படி வடமாநிலங்களில் நிலவிய அதே கலாச்சாரம்தான், தமிழ்நாட்டிலும் பரவிவிட்டது,
ஈசிஆரில் இருக்கக்கூடிய இரவு விருந்துகளில் முழுக்க முழுக்க விலைஉயர்ந்த மதுபானங்களைவிட, அதிகமான போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன..ஐயப்பனும் இதற்கு விதிவிலக்கல்ல.. வீட்டுக்கு வரும்போதே போதையில்தான் வருவதாக அவரது மனைவி சொல்கிறார்..
போதை பொருள் நடமாட்டம்
வாகன சோதனையின்போது, ஆல்கஹால் உடம்பில் இருந்தால் மட்டுமே அந்த மிஷினில் ஊதும்போது சவுண்டு வரும்.. ஆனால், கஞ்சா, ஹெராயின், கோகைன் போன்ற பொருட்களை உபயோகப்படுத்தியிருந்தால், அதை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் இன்னும் காவல்துறையில் வரவில்லை.
சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் ஒரே பொழுதுபோக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடுவதுதான்.. எனவே, பெரும்பாலானோர் ஈசிஆரில் கூடிவிடுவார்கள். அங்கே எல்லாவிதமான உயர் வகையான மதுவிருந்துகள், கடல் உணவு, ஊர்வன, பறப்பன எல்லாம் இருக்கும். விடிய விடிய ஸ்மிம்மிங் புல், மியூசிக், குடியுடன் இருக்கும்.. விடிந்ததும் பிரபலங்களின் டிரைவர்கள், அவர்களை தட்டுத்தடுமாறி வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.
நடிகர்களின் புகழ்வெளிச்சம்
உச்சபட்ச நடிகர்களின் விவாகரத்துகளெல்லாம் இதுபோன்ற புகார்களை வைத்தே அதிகமாக நடக்கிறது.. போதை அதிகமானால், மூளை மழுங்கிவிடும்.. போதை பொருளின் ஆதிக்கமும் உடலில் அதிகமாகிவிடும்.. ஐயப்பனுக்கும் அப்படித்தான் வந்துள்ளது.. ஐயப்பனை பொறுத்தவரை, புகழ்வெளிச்சம், நட்பு வட்டாரம், பெண் நண்பிகள் என அவருடைய உல்லாச கேளிக்கை விருந்துகள் போய் கொண்டிருக்கின்றன..
எப்போதுமே மதுபோதையின் தாக்கம் குறைவாக இருக்கும், ஆனால், ஹெயிரான் உள்ளிட்டவைகளை பயன்படுத்தினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால், மனநல மருத்துவமனையில் நடிகர் ஐயப்பனை அனுமதித்து சரியான சிகிச்சை செய்ய வேண்டும்.
அதேபோல, ஐயப்பனின் சீரியலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்ளும்வரை, ஐயப்பனை சீரியலில் புறக்கணிப்போம் என்று சொல்ல வேண்டும்.. அதேபோல, மக்களும் திருந்தணும்.. நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைப்பட வாழ்க்கை வேறு வேறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்..
ஐயப்பன் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.. காவல்துறை விசாரித்து, அவரை கண்டித்து அனுப்பிவைக்கலாம்.. எனவே, போதை பொருளை பயன்பாடு இருப்பவர்கள், தாங்களாய்தான் திருந்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications