திருமணம் முடிஞ்ச கையோடு அதை வெளியிட்ட சைத்ரா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்
சென்னை: சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி கதாநாயகியாக அறிமுகமாகி தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய செல்லமான சேட்டைகளால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சைத்ரா ரெட்டியின் திருமணம் இப்போதுதான் சிறப்பாக நடந்து முடிந்தது
அந்த திருமணத்திற்கு பிறகு அவர் முதல் முறையாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலரும் கமெண்ட் மழையை கொட்டி தீர்த்து வருகிறார்கள். மஞ்சக் காட்டு மைனாவாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது
எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி ஒரு திருமணத்தில் இவ்வளவு சடங்குகள் இருக்கு என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டி நடைபெற்ற இவர்களது திருமணம் வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது.

பாரம்பரிய திருமணம்
விதவிதமான பாரம்பரியப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கண்ணாடி வளையல் இடுவதும் ,பூ பந்து வீசி விளையாடுவது, நலுங்கு வைப்பது போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இதில் இவரது தோழிகளான சீரியல் நடிகைகளும் கலந்து கொண்டு கலக்கி இருந்தார்கள் .அதில் யாருக்கு திருமணம் என்று தெரியாத அளவிற்கு ஜாலியாக இவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கலக்கிய தோழிகள்
இவரது ஃப்ரெண்ட்ஸ்களான ரேஷ்மா ஷபானா நட்சத்திரா மற்றும் ஸ்ரீமதி போன்றவர்கள் செய்த சேட்டைகளும் வைரலாக பரவி வந்தது .இந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்த்து அவர்களுடைய ரசிகர்களும் சைத்ராவிற்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். ஆனால் அதை அவர்கள் எடுத்த வீடியோ அல்லாமல் ரசிகர்கள் எடுத்து வெளியிட்ட வீடியோ போலத்தான் இருந்தது.

பெருமூச்சு விட்ட ரசிகர்கள்
அதனால் பலரும் இவர்களிடம் முழுமையான திருமண வீடியோவை வெளியிடும்படி கேட்டு வருகிறார்கள். திருமணம் முடிந்த கையோடு பல்வேறு போட்டோக்களை எடுத்து குவித்த சைத்ரா ரெட்டி தானும் தனது கணவரும் தீபாவளியை கொண்டாடி அந்த போட்டோக்களையும் வெளியிட்டிருந்தார். அதை பார்த்ததும் ரசிகர்கள் பெருமூச்சு விட்டாலும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விடலையே
இதுமட்டுமல்லாமல் திருமணம் முடிந்தாலும் யாரடி நீ மோகினி சீரியலில் இன்னும் அதே வில்லதனத்தை தான் இவர் காட்டிக் கொண்டிருக்கிறார் .இவர் என்னதான் வில்லியாக நடித்தாலும் இவரைப்பற்றி திட்டுவதற்கு மனசு வரவில்லை அவரது ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு இவர் அழகால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சைத்ரா ரெட்டியின் ஸ்பெஷாலிட்டியே அதுதானே.

தோழி நட்சத்திரா
இப்பகூட அந்த சீரியலில் வெண்ணிலாவாக நடிக்கும் நட்சத்திராவை மந்திரவாதியின் உதவியோடு கிளியாக மாற்றிவிட வேண்டும் என்று செய்யும் வில்லத்தனத்தை பல ரசிகர்கள் தூற்றினாலும் இவரது அழகான முகத்தை பார்த்து உண்மையாக திட்ட முடியவில்லையாம். இவருடைய ஹைட்டுகும் உடல் அமைப்புக்கும் வில்லத்தனம் செட் ஆனாலும் இவர் முதல் சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலில் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்ததால் இவரை இன்னுமும் ரசிகர்கள் கதாநாயகியாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

மஞ்சக் காட்டு சைத்ரா
என்னதான் இருந்தாலும் திருமணம் முடிந்த கையோடு இவர் தனியாக மஞ்சக் கலர் பதுமையாக மாறி வெளியிட்டிருக்கும் புகைப்படம்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தையும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள் திருமணத்தின் முழு வீடியோவையும் வெளியிடச் சொல்லி தான் கேட்டு வருகிறார்கள். ரசிகர்கள் கொஞ்சும்போது நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா அவர்கள் இந்த மஞ்சள் கலர் மைனாவை பார்த்து கண்ணு கூசுது என்று கிண்டல் பண்ணியும் வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications