உங்க பாட்டை வப்பாட்டி தான பாடுச்சு? திரௌபதி 2 பாடலுக்காக மன்னிப்பு கேட்ட சின்மயிக்கு மதுவந்தியின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள 'திரௌபதி 2' படத்தில் "எம்கானோ" என்ற பாடலை பாடியதற்காகப் பாடகி சின்மயி சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டது பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சின்மயி மீதான இந்த விமர்சனங்களுக்கு மோகன் ஜி கண்டனம் தெரிவிச்சிருக்கார். இந்த சர்ச்சையில் நடிகை மதுவந்தியும் இணைந்து சின்மயியிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Chinmayi Mohan G Maduvanti

சின்மயியின் மன்னிப்பு

'திரௌபதி 2' படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைச்சிருக்கார். சமீபத்தில் வெளியான "எம்கானோ" பாடலைப் பாடியதற்குப் பின்பு சின்மயி தனது சமூக ஊடகத் தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். "ஜிப்ரானை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். அவர் ஸ்டுடியோவில் இருந்து என்னை பாட அழைத்தபோது அங்குச் சென்று பாடிவிட்டு வந்துவிட்டேன். அப்போது அங்கு ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் அந்தப் பாடலைப் பாடி இருக்க மாட்டேன்.

"அந்த கொள்கைக்கும் எனக்கும் நிறைய முரண்பாடு உள்ளது, இதுதான் உண்மை" என்று பதிவிட்டு, மன்னிப்புக் கோரியிருந்தார்.

மோகன் ஜி இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மத்தைக் கொட்டுகிறது என்றும், தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவு இளைஞர்களைக் கெட்டவர்களாகக் காட்டுகிறார் என்றும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதனால் மோகன் ஜி படத்தில் இவர் பாடியதற்காக சோசியல் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பி வந்ததால் தான் சின்மயி மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டு இருந்தார்.

சின்மயி பதிவு போட்டதைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜியும் ஒரு பதிவு வெளியிட்டிருக்கார். "என்னுடன் 'திரௌபதி 2' படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறி வைத்துத் தாக்க வேண்டாம். திரௌபதி 2' படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறி வைத்துத் தாக்குவது கோழைத்தனம் ஆகும்" என்று கூறி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கார்.

மதுவந்தி எழுப்பிய கேள்வி

சின்மயியின் இந்த மன்னிப்பு கோரும் செயலுக்கு மதுவந்தி எதிர்ப்புத் தெரிவித்து, சின்மயிக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, சினிமாவில் இருக்கும் போது ஒவ்வொரு படத்திலும் தனது கொள்கைக்கும் கருத்துக்கும் ஒத்துப்போன பாடல்களை மட்டுமே தான் பாடியிருக்காரா சின்மயி என்ற சவாலை மதுவந்தி வைத்தார்.

மதுவந்தியின் அடுத்தப் பாய்ச்சலான கேள்வி இது தான். முத்த மழை பாட்டு படத்துல எந்த கேரக்டர் படிச்சு? படத்தோட ஹீரோவோட வப்பாட்டிதானே பாடினாங்க? அப்போ அந்தப் படத்துல அந்த விஷயத்தை ஆதரிச்சுப் பாடினீங்களானு கேள்வி எழுப்பினார். ஒரு கலைஞர் எல்லா பாத்திரங்களுக்கும் உழைப்புக் கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டார் மதுவந்தி.

சினிமால கொள்கையோடதான் இருக்க முடியும்னா நம்பியார் வில்லனாக நடிச்சிருக்க முடியாது எங்க அப்பா பெரியார் படத்துல நடிச்சிருக்கவே கூடாது என்று ஆதங்கத்தோட பேசியுள்ளார். சினிமா என்பது ஒரு கலை வடிவம் தானே தவிர தனிப்பட்ட கொள்கையைப் பிரதிபலிக்க வேண்டிய இடம் இல்லை என்பதை மதுவந்தி வலியுறுத்தியுள்ளார்.

சினிமா படங்களில் சமூக சர்ச்சையை கிளப்பும் கருத்துகளுக்கு உழைக்கும் கலைஞர்களின் பங்கு எந்தளவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தை இந்தச் சம்பவம் தூண்டியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+