விஜய் மனைவி சங்கீதாவுக்கு உங்க தோழி செய்தது சரியா? அதை ஏன் பேசல.. சின்மயியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
சென்னை: தமிழ் இலக்கியத்தில் மிக உயர்ந்த மரியாதையாகக் கருதப்படும் ஞான பீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் தமிழ் இலக்கிய உலகம் முழுவதும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு விருது
தமிழ் மொழியில் கடைசியாக 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன்- க்கு இந்த விருது கிடைத்தது. அதன் பிறகு 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் இந்த விருதை பெற்றார். அதற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வைரமுத்துவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் இலக்கிய உலகில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பிரபலங்கள் வாழ்த்து
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வைரமுத்துவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் கவிஞர் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சின்மயியின் எதிர்ப்பு
ஆனால் இந்த வாழ்த்துகளை பார்த்த பின்னர் பாடகி சின்மயி (Chinmayi Sripaada) மீண்டும் வைரமுத்து குறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டதாவது, சினிமாவில் சக்திவாய்ந்த ஆண்கள் அரசியலுக்கு செல்லும்போது, அவர்களால் பாதிக்கப்பட்டதாக பெண்கள் கூறும் விஷயங்களை யாரும் கேட்க விரும்புவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கமல்ஹாசனின் வாழ்த்து பதிவை மேற்கோளாக காட்டி, "அவரது கட்சியிலேயே இருந்த ஒரு பெண் வைரமுத்துவின் பெயரை முன்பு கூறியிருந்தார். ஆனாலும் பல ஆண்கள் தங்களது நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள் என்ற காரணத்தால் அவர்களையே ஆதரிப்பார்கள்" என்று விமர்சித்துள்ளார்.
ரஜினிக்கு கேள்வி
இதோடு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்து பதிவையும் மேற்கோளாக காட்டி, "அய்யோ... புரியவே புரியாதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.
ரசிகர்களின் கலவையான எதிர்வினை
சின்மயியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சிலர் வேறு கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ஒரு ரசிகர், "வைரமுத்து நீங்கள் சொன்னது போல அவர் தவறாக நடந்து கொண்டிருந்தால் அது தவறு தான். ஆனால் அதேபோல் உங்கள் தோழி திரிஷா சங்கீதாவுக்கு செய்த விஷயத்திற்காக நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? அவரும் ஒரு பெண் தானே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் பேசப்படும் பழைய சர்ச்சை
சில ஆண்டுகளுக்கு முன்பு மீ டூ இயக்கத்தின் போது சின்மயி, வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த விவகாரம் அடிக்கடி சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது.
இப்போது சின்மயி வைரமுத்துவிற்கு எதிராக மீண்டும் போஸ்ட் போட்டு வரும் நிலையில் அதிகமான ரசிகர்கள் அவர் உங்களிடம் தவறாக நடந்து கொண்டிருந்தால் அவரை எதற்காக உங்கள் கல்யாண பங்க்ஷனுக்கு கூப்பிட்டீங்க என்று சின்மயின் கல்யாணத்தில் வைரமுத்து கலந்து கொண்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து ட்ரோல் செய்கின்றனர்.
தொடரும் விவாதம்
இப்போது வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பழைய விவகாரம் மீண்டும் பேசப்பட ஆரம்பித்துள்ளது. ஒருபுறம் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் குரல்கள் எழுந்துக் கொண்டிருக்க, மறுபக்கம் பழைய சர்ச்சைகளும் பேசப்பட்டு வருகிறது. இதனால் வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த பெரிய இலக்கிய விருது தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications