அடக் கொடுமையே.. சின்னக் கவுண்டர் சீனை அப்படியே சுட்டுட்டீங்களேய்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியல் பச்சை பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குன்னு சொல்லியாச்சு. இதை பார்க்கும்போது நாம் பல விஷயங்களை இழந்து இன்னிக்கு நிக்கறோம்னும் சொல்லியாச்சு.

அதுவும் இந்த கோடை காலத்துல வெளியில போனா வெக்கை, உள்ளே இருந்தா வியர்வைன்னு ஒரே எரிச்சலா இருக்கு. இந்த வருஷம் வெயில் ஜாஸ்தின்னு சொல்றாங்க பயமா இருக்கு.

இந்த நேரத்துல கண்மணி சீரியலில் பசுமையைப் பார்க்கும்போது ஆறுதலா, இதமா, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.

கடிச்சுதில்ல

கடிச்சுதில்ல

கண்ணனின் அக்காவை பாம்பு கடிச்சு, முத்துச்செல்வி காப்பாத்தினாளே ... அதுக்கு நன்றி கடன் செலுத்த, முத்து செல்வி வீட்டுக்கு வருகிறான் கண்ணன். முத்துசெல்வியும் அவளது அப்பாவும் கண்ணன் தரும் பணக்கட்டுக்களை வாங்க மறுக்கிறார்கள். இந்த ஊருக்கு பொழைக்க வந்த எங்களுக்கு தங்க இடம் குடுத்து, வேலை குடுத்து வாழ வச்சிருக்கீங்க.

10 ஜென்மம்

10 ஜென்மம்

இந்த கடனைத் தீர்க்கவே 10 ஜென்மம் வேணும் சின்னவரே... நீங்க என்னடான்னா நண்றிகடன்னு பணத்தை கொண்டு வரீங்க. எதையும் எதிர்பார்த்து வைத்தியம் பார்க்கலை சின்னவரே... பணத்தை எடுத்துட்டு போங்கன்னு சொல்றாங்க முத்து செல்வியும், அவங்க அப்பாவும்.

தலை நிமிர்ந்து

தலை நிமிர்ந்து

தலை குனிந்து (நிச்சயமா விஜயகாந்த் மாதிரிதான்) சின்னவர் நடந்து போக, சின்னவர் என்று அழைக்கிறாள் முத்து செல்வி. (அதே சின்னக்கவுண்டர் சுகன்யா மாதிரிதான்) சின்னவர் திரும்பிப் பார்க்க, சின்னவர்னா எங்களுக்கு சிங்கம் மாதிரி. சிங்கம் தலை நிமிர்ந்து நடந்தாதான் பெருமைன்னு சொல்றா... சின்னவர் அழகா சிரிச்சுட்டு தலை நிமிர்ந்து நடக்கறார்.

கூச்சமில்லாம காப்பியா ?

கூச்சமில்லாம காப்பியா ?

ஆமா, இப்போ எல்லாம் படத்துல வர சீனை உல்டாவா போட்டு, நாடகங்கள் எடுக்கறது ரொம்ப சகஜமா போச்சே... காப் பி அடிக்கறோமேன்னு கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இருக்காதா? நீங்க காப்பி அடிக்கலேன்னு சொன்னா நாங்க நம்பறதுக்கு முட்டாளா, அதுல மனோரமாவை பாம்பு கடிச்சுது, இதுல பூர்ணிமா பாக்கியராஜுக்கு பாம்பு கடிச்சுது மீதி கதையும் சொல்லணுமா? என்ன கன்றாவியோ...நாட்டுல கிரியேட்டிவிட்டிக்கு அவ்ளோ பஞ்சமா? மூளையை யூஸ் பண்ணுங்கப்பா.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+