தப்பா பேசுற அந்த வாயை.. 5 விரலையும் நீட்டி .. கட்டை விரலை மடக்கி.. ஓங்கி குத்து விட்ட நந்தினி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத் தம்பி தொடரில், சின்னத் தம்பியின் பெற்றோருக்கு 60ம் கல்யாணம் ஏற்பாடு செய்கிறார்கள் சின்னத்தம்பியும், நந்தினியும். ஆனால், பணம் போதுமான அளவு புரட்ட கஷ்டப்பட வேண்டி இருக்கிறது....

உடன் படித்த தோழன் நல்ல வசதியில் இருக்கிறான் அவனிடம் பணம் கேட்டு பார்க்கிறேன் என்று நந்தினி சொல்ல, இஷ்டமில்லாமல் அழைத்து சென்ற சின்னத்தம்பி, வெளியிலேயே நின்று விடுகிறான்.

பணம் கேட்க வந்த நந்தினியை படுக்கைக்கு அழைக்கிறான் காலேஜ் மேட் கவின். கண்ணீர் விட்டபடி கணவனிடம் வருகிறாள் நந்தினி.கணவன் கேட்க உண்மையை சொல்ல மறுக்கிறாள், வற்புறுத்தி கேட்டபோது, கவின் தன்னை படுக்கைக்கு அழைத்ததை கூற, இதுக்குப் பிறகுதான்...ஆஹா... என்ன ஒரு காட்சி.

தப்பா பேசியது நந்தினி

தப்பா பேசியது நந்தினி

நந்தினி பொண்ணுங்களை தப்பா பேசற அந்த வாயை, கை விரல்களை அப்படியே விரித்து, முதலில் கட்டை விரலை உள்ளங்கையில் மடக்கி, பின்னர் ஒவ்வொரு விரலாக மடக்கி, மூக்கில் ஓங்கி ஒரு குத்து என்கிறான் சின்னத்தம்பி. அதையே செய்கிறாள் நந்தினி.

பல்லு விழலையே

பல்லு விழலையே

சரியா குத்து விடலை நந்தினி, ஒரு பல் கூட விழலைன்னு கணவன் சொல்ல, ஓங்கி குத்து விடுகிறாள் நந்தினி. இப்படித்தான் பல்லு விழுந்து குடம் குடமா ரத்தம் கொட்டணும்.

நீட்டி திருப்பி

நீட்டி திருப்பி

இப்போ கண்ணு, கண்ணு நல்லா இருக்கறதுனாலதானே பொண்ணுங்களை தப்பான கண்ணோட்டத்துல பார்க்கறான்.
இரண்டு விரல்களையும் நீட்டி, அப்படியே திருப்பி ரெண்டு விரலாலயும் கண்ணுல குத்துன்னு சொல்ல அப்படியே செய்கிறாள் நந்தினி. நந்தினி கை முட்டி இருக்குல்ல முட்டி..அதை மடக்கி, அவன் மூக்குல ஒரே குத்து... சில்லு உடையணும் என கணவன் தூண்ட, அதையும் செய்கிறாள் நந்தினி.

இனிமே நினைப்பே

இனிமே நினைப்பே

ஆமபளைங்கற திமிர்லதானே இப்படி பொம்பளைங்களை படுக்கைக்கு அழைக்கிறான். இனிமே இந்த எண்ணமே வரக்கூடாது. என்ன பண்றே, உன் ரெண்டு கையிலயும் அவன் ஷோல்டரைப் புடிச்சு . அப்படியே உன் கால் முட்டி இருக்குல்ல அதுல ஓங்கி ஒரு எத்துன்னு சொல்ல அப்படியே செய்கிறாள் நந்தினி.

சோலி முடிஞ்சுருச்சு

சோலி முடிஞ்சுருச்சு

கவின் சுருண்டு விழ, வா நந்தினி சோலி முடிஞ்சுச்சுருச்சு போலாம்னு பொண்டாட்டியை அழைக்க, கணவனின் கரம் பிடித்து வீர நடை போடுகிறாள் நந்தினி. இப்படிப்பட்ட கணவன்கள் பெண்களுக்கு அமைந்துவிட்டால், உடனுக்குடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். மீ டூ எப்போ வரும்னு காத்திருக்க வேண்டாமே..

சீரியலிலும் நல்ல விஷயங்களைக் கத்து தராங்கப்பா!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+