அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே.. ஆஹா.. ரொமான்ஸ்... சினிமாவை மிஞ்சுதே!
சென்னை: விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியல் ரொமான்ஸ் .. . கிராமத்துக்கு தமது அக்கா வீட்டுக்கு வந்திருக்கான் ஆரா. வெட்ட வெளியில, அதிகாலையில அண்டாவுல இருக்கும் தண்ணிய தலையில கொட்டி குளிக்கணும்.
ஆனா, இதெல்லாம் ஆராவுக்கு பழக்கமில்லை. என்ன செய்வான் பாவம், முதல் சொம்பு மட்டும்தாண்டா குளிரும்.. அடுத்தடுத்து குளிராது குளிச்சுடுடான்னு தனக்குத் தானே பேசிக்கறான். ஆனா, பாவம் முடியலை... தலையில தண்ணி பட்டாலே உடம்பெல்லாம் சிலுக்குது.

அப்போதான் காதலி, அதாவது அக்காவின் நாத்தனார் என்ட்ரி... இவளும் அத்தைக்குப் பிறந்தவள்தானே.. இவன் தண்ணீரை ஊத்தவா, வைக்கவா என்று இருக்க, ஆரா என்று அழைக்கிறாள் இவள். அப்போ ஒலிக்குதுங்க அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே...பருவம் சுமந்து வரும் பாவாடை தாவணியே என்று ஆரம்பித்து ஆற்றங்கரை மரமேன்னு உச்சஸ்தாயில பாடும் வரைக்கும் சொம்புல தண்ணிய மொண்டு மொண்டு ஊத்தி குளிக்கறான்.

காதலியை பார்த்தவுடன் காதலனுக்கு குளிரலை. போதா குறைக்கு தண்ணிய தலையில் வச்சுக்கிட்டு காதலி மேல சிலுப்பி விடறான் பாருங்க... அவளுக்கும் மூட் சாங். கிரியேட் ஆகுது..பாவாடை தாவணியில் பொண்ணு நல்லா அழகா கொழுகொழுன்னு ஆசை பட நாயகி சுவலட்சுமி மாதிரி இருக்கு... இப்படி ஒரு காதலி கிடைச்சா, இமய மலையில கூட ஐஸ் தண்ணியில குளிக்கலாம்...
அடுத்து இன்னொரு ரொமான்ஸ் பன்றாரு நம்ம ஆளு... வாலி படத்தில் வில்லன் அஜீத் பண்ணின வேலைங்க இது.. யாரு பார்த்த வேலைடா இதுன்னு கேட்டுடாதீங்க.. காதலியின் தலையை அத்தை வாரிவிட்டு கொண்டு இருந்தவர், நடுவுல எழுந்து சென்றுவிட, காதலி தலை முடியை தொட இது நல்ல வாய்ப்பு என்று , கிட்ட போடா ஆரான்னு மைண்ட் வாய்ஸ் சொல்லுது...போய் உட்கார்ந்து, அவள் முடியை எடுத்து, கன்னத்தில் வைத்து படுக்கிறான், முகர்ந்து பார்க்கிறான். என்ன வாசனை, என்ன வாசனை என்று வியந்து காதலில் மூழ்கிப் போகிறான்.
பாவம் கதையில் மட்டும் நாயகிகளுக்கு ஆண் கை விரல்களுக்கும், பெண்ணின் கை விரல்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது.!
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications