Kanmani Serial: அப்படியே சேம் சின்ன கவுண்டர்தான்.. டிட்டோ காப்பியா இருக்குபா!
சென்னை: கண்ணு படப் போகுதய்யா சின்ன கவுண்டரே.. அது சின்ன கவுண்டர் படத்தில். சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணு படப் போகுதய்யா சின்னவரேதான். அப்படியே சேம்... சின்ன கவுண்டர் செய்யும் செயல்கள் எல்லாம் செய்யறார் நம்ம சின்னவர்.
தர்மதுரை மாமா நல்லா படிக்கும் ஒரு பையனை தன் செலவில் டவுனுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். மாமா அந்த பொறுப்பை கண்ணன் கையில் கொடுக்க. அன்று முதல் சின்னவர் கண்ணன் அந்த பையனின் படிப்பு விஷயங்களை கவனித்து வருகிறார்.
சின்னவர் படிக்க வைத்து வரும் பையன் இப்போது ஐஏஎஸ் படிப்புக்கு தயாராகி வருகிறான். சின்னவரை கும்பிட்டுக்கோ என்று அம்மா சொல்ல, அப்போதுதான் அவன் சின்னவரை பார்க்கிறானாம். இப்படி போகுது கதை.

வளர்மதி வான்மதி
சித்தப்பா ராஜதுரையின் பெண் வான்மதி இந்த ஐஏஎஸ்க்கு படிக்கும் பையனுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி விடுகிறாள். சின்னவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யும் பையன். ராஜதுரை காலிலும் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறான். அப்போதுதான் சித்தப்பா சொல்றார்.. கண்ணா எல்லாரையும் சரிக்கு சமமா நினைக்காதே.. நாளைக்கு இவர்களில் ஒருத்தன் உன் தோளில் கைபோட்டு நம்ம வீட்டுக்கே பொண்ணு கேட்டு வருவான் என்று.

கண்ணன் சின்னவர்
அப்போது சின்னவரான கண்ணன், மாமா ஏற்றத் தாழ்வு இல்லாமல் சரிசமமா பழகறது எப்படின்னுதான் எனக்கு தர்மதுரை மாமா கத்துக் கொடுத்து இருக்கார். இன்னும் சொல்லப் போனால் ஏற்றத் தாழ்வு பார்த்து இருந்தா அக்காவை மாமா கல்யாணம் செய்து எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து இருக்க மாட்டார். நல்லதுன்னா நினைச்ச உடனே செய்துடணும் அவ்ளோதான் மாமா நான் காத்துக்கிட்டதுன்னு சொல்றான் கண்ணன்.

கற்ற பாடம்
இதில் கற்ற பாடம் என்ன என்று கேள்வி கேட்பது போல.. இந்த சம்பவத்தில் இருந்து என்ன தெரியுதுன்னு பார்த்தா.. கண்ணன் படிக்க வச்ச பையன் வான்மதியை காதலிச்சு பொண்ணு கேட்டு வர போறான். இப்படி கெஸ் பண்ற மாதிரி சுலபமான கதை சின்ன கவுண்டர் பாணி கண்மணி சீரியல். சின்னவர் கண்ணனா சஞ்சீவ் நல்லா நடிச்சு இருக்கார்.

கதை இல்லை
கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னால் விறுவிறுன்னு இருந்த கண்மணி சீரியல், இப்போ வேகம் குறைஞ்சு சுவாரசியம் இல்லாமலும் இருக்கு. அதில்தான் புதிதா இந்த சின்ன கவுண்டர் சீனை செருகி இருக்காங்க. காட்சி அமைப்புகளுக்கு சஞ்சீவ் பொருத்தமா இருப்பதனால் ரசிக்கலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications