பட்டு வேஷ்டி, சட்டை.. கூலிங் கிளாஸ்... அலப்பறை... சூப்பர் சின்னவரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் நல்ல வளமான ஒரு கிராமத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தறாங்க. அதுக்கே ஒரு சுபாஷ் போடலாம்.

திரும்பின இடமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சி..பார்க்கற பக்கம் எல்லாம் வெள்ளந்தி மக்கள்...வயல்வெளிகள், நீரோடைகள்னு மனசை அள்ளுது.

கண்ணன் அக்கா பொண்ணு சவுந்தர்யா, தோப்பு வீட்டில் குடியிருக்கும் முத்து செல்வின்னு ரெண்டுபொம்பளை பசங்களும் பார்க்கறதுக்கு நல்லா இருக்காங்க.

கூத்து

கூத்து

வள்ளித் திருமணம் கூத்து நடத்த தயாராக இருக்கும் நேரத்தில் ஆகாஷின் அம்மா அதைத் தடுக்கணும்ன்ற நோக்கத்தில், வள்ளி முருகனாக நடிக்க இருந்தவர்களை அழைத்து, வெளிநாட்டுக்கு போனா அதிகம் சம்பாதிக்கலாம்னு ஆசை வார்த்தை காட்டறாங்க.

சவுந்தர்யா

சவுந்தர்யா

கண்ணன் தனது காரில் சவுந்தர்யா, மற்றும் மற்ற பிள்ளைகளையம் அழைச்சுக்கிட்டு கூத்து பார்க்க வாரான். பட்டு வேஷ்டி, மஞ்சள் சட்டை, கூலிங் கிளாஸ் என்று அசத்த, சவுந்தர்யாவின் சித்தப்பா பெண், ஐயோ மாமா முதலில் கூலிங் கிளாஸை கழட்டுன்னு சொல்றா.. ஏன்.. நல்லாத்தானே இருக்கு... இல்லை சவுண்டுன்னு கேட்க, பின்ன என்ன மாமா இப்போ ராத்திரி.. இப்ப கூலிங் கிளாஸ் போட்டா என்ன மாமா அர்த்தம்.. கழட்டு மாமான்னு சவுண்டு சவுண்டுவிட... சவுண்டு சொன்னா சரியாத்தான் இருக்கும்னு கண்ணாடியை கழட்டடிடறான் கண்ணன்.

இவ்ளோ நேரம்

இவ்ளோ நேரம்

என்ன மாமா கூத்து நடத்த இவ்ளோ நேரம்... இன்னும் ஆரம்பிக்கலியான்னு சவுந்தர்யா கேட்கறா. . இரு சவுண்டு ஆரம்பிக்க சொல்றேன்... நீ கூத்து பார்த்ததில்லைல... அதனால சிறப்பா நடத்த சொல்லி இருக்கேன் சவுன்டுன்னு சொல்றான். பின்பக்கம் போயி கூத்து நடத்தறவங்க ரெடியான்னு கேட்கறான்.

கல்யாணம்

கல்யாணம்

அதுக்குள்ளே ரெண்டு பொண்ணுங்க வந்து.. தோ பாருடி.. சின்னவரு வந்துருக்காரு.. வா பேசிட்டு போலாம்னு கண்ணன் உட்கார்ந்து இருக்கும் இடத்துக்கு வர்றாங்க.. இஞ்சாருங்க புள்ளே... நீங்க எல்லாம் கிண்டல் பண்ணாம போயிருங்க... கூட சவுந்தர்யா இருக்கு. நல்ல மூட்ல இருக்கேன்னு சொல்றான்.

சின்னவரே

சின்னவரே

அதெப்படி சின்னவரே.. இந்த மாதிரி விழா நடத்தறப்போ உங்களை குடும்பத்தோடு பார்த்து கலாய்ச்சாதான் உண்டு. கூத்தெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். இன்னிக்கு ஒரு முடிவு சொல்லுங்கன்னு கேட்கறாங்க. முடிவா, எதுக்கு முடிவுன்னு கண்ணன் கேட்கறான்.

இல்லை

இல்லை

சின்னவரே.. உங்களுக்கும் உங்க அக்கா பொண்ணுக்கும் கல்யாணம்னு ஊரே பேசிக்குது. அப்படி உங்க அக்கா பொண்ணை நீங்க கல்யாணம் செய்துக்கலேன்னா சொல்லுங்கன்னு சொல்றாங்க அக்கா, தங்கையான ரெண்டு பொண்ணுகளும்.

பதில் சொல்லணும்?

பதில் சொல்லணும்?

எதுக்கு உங்களுக்கு பதில் சொல்லணும்னு கண்ணன் கேட்க.. அவங்க கட்டிக்கலேன்னா.. உங்களை நாங்க ரெண்டு பெரும் கட்டிக்கலாம்னுதான்னு சொல்றாங்க.. அடிங்க..போங்க புள்ளே..எந்த நேரத்துல கிண்டல் பண்றதுன்னு தெரியாதுன்னு கண்ணன் சொல்ல...சின்னவரே.. அக்காவைக் கட்டினா தங்கச்சி ஃபிரீன்றதுதான் இப்போதைய டிரண்டு.. உங்களுக்குத் தெரியாதா சின்னவரேன்னு கலாய்ச்சுட்டு ஓடிடறாங்க.

ஒரு கிராமத்தில் திருவிழாவின் போது என்னென்ன நடக்குமோ அத்தனையையும் மிக அழகா காமிச்சுக்கிட்டு வராங்க...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+