சின்னி ஜெயந்த், ஜெய்சங்கர் ரூட்டில் போயிருக்கலாம்.. டீமில் நிராகரிக்கப்பட்ட மனோஜ் பாரதிராஜா: பிரபலம்
சென்னை: இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றாவிட்டால், மனோஜூக்கு ஆன்மா சாந்தியடையாதா? இருக்கும்போது ஆதரவாக இல்லாமல் எதுக்கு இதெல்லாம்? நான் நாத்திகம் பேசவில்லை. ஆனால், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, பிறருக்கு உதவியாக இருக்கலாம் என்கிறேன்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Retro Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "பாரதிராஜா என்ற அடையாளம் இல்லாமல் முன்னுக்கு வரவேண்டும் என்ற வேட்கை மனோஜுக்குள் இருந்திருக்கிறது,.

நம்மீதுதான் தவறு
பாரதிராஜா என்ற அடையாளத்தில் நாம் அனைவரும் பார்த்து பார்த்தே, மனோஜ் என்ற நபரை செய்துவிட்டோம். அது நம்முடைய கோளாறுதானே தவிர, மனோஜ் தவறு இல்லை. பின்புலம் இல்லாத அஜித் போன்ற நபர்களை, எந்த அடையாளமும் இல்லாமல் நாம் பார்க்கிறோம். ஆனால், மனோஜை அப்படி நாம் அப்படி பார்க்கவில்லையே? மனோஜை சக மனிதராக பாவித்து, நம் பக்கத்திலேயே மனோஜை வைத்திருக்காமல் விட்டுவிட்டோம்.
சினிமா துறையில் ஒருவர் இருந்தால், சினிமா துறையில் தான் தன்னுடைய வாரிசை கொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணத்துக்கு சின்னி ஜெயந்த், தன்னுடைய மகனை மாவட்ட கலெக்டராக உயர்த்தினார்.. ஜெய்சங்கர் தன்னுடைய மகனை கண் மருத்துவராக்கினார்.. இப்படி இன்னும் பலரை உதாரணத்துக்கு சொல்லலாம். ஆனால், அப்படியான துறைகளில் செல்வதற்கு பிரபலங்களின் மகன்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்பது முக்கியம்.
போராடிய மனோஜ்
மனோஜை நடிகராகவும், இயக்குனராகவும்தான் கொண்டுவர விரும்பினார் பாரதிராஜா.. மற்ற இயக்குனர்களிடம் உதவியாளராக, மனோஜை கொண்டுபோய் சேர்த்திருக்க கூடாது. பாரதிராஜாவே தன்னிடம் மனோஜை உதவியாளராக சேர்த்து கொண்டிருந்தால், பல அனுபவங்கள் மனோஜுக்கு கிடைத்திருக்கும். தனியாக படம் இயக்கி தோல்வி அடைந்திருந்தாலும்கூட, அவருக்கு மற்றொரு வாய்ப்பை பாரதிராஜா ஏற்படுத்தி தந்திருக்கலாம்.
ஒன்று மனோஜூக்கான வாய்ப்பை தந்திருக்க வேண்டும் அல்லது மனோஜூக்கான வாய்ப்பை தேடி தந்திருக்க வேண்டும். இரண்டுமே செய்யவில்லை.. நடிகராவதில் மனோஜ் தோல்வி அடைந்ததால், அதற்கு பிறகு அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டார் பாரதிராஜா.. இதனால் தனக்குதானே மனோஜ் போராடியிருக்கிறார்.. ஆனாலும் முடியாததால், மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டார்.
சக தோழர்கள் வெற்றி
அதேபோல சக தோழர்களின் வெற்றியை போல தனக்கு இல்லையே என்ற ஆதங்கமும் மனோஜுக்கு இருக்கலாம்.. உதாரணத்துக்கு இன்று முக்கிய இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் இருக்கிறார்.. நாமும் அவரை போல வரவேண்டும் என்ற எண்ணம் மனோஜ்க்கு இருந்திருக்கும்.. இதெல்லாம்தான் சேர்ந்து அவரது உடல்நிலை பாதித்துள்ளது.
எல்லா நடிகர்களிடமும் சிரித்து இயல்பாக பேசக்கூடியவர் மனோஜ். தான் ஏறாத நிறுவனமே இல்லை எனறு மனோஜ்ஜே சொல்லியிருக்கிறார்.. அதனால் எல்லா வகையிலும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.. அப்படியானால் அந்த நிராகரிப்பு எதனால்? யாரால்?
திருவண்ணாமலை தீபம்
பாரதிராஜா மட்டும் சினிமாவில் நடித்துக் கொண்டு, அவருடைய கேரியரையே கவனித்து கொள்வது போல் தெரிகிறது. தனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராதது உள்ளிட்ட சில வாக்குவாதங்கள் பாரதிராஜா - மனோஜ் என இரு தரப்பிலும் நடந்ததாகவும் சொல்கிறார்கள்.. ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லாமல், மனோஜ் தனித்து விடப்பட்டுவிட்டாரோ? என்றே தோன்றுகிறது.
இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றாவிட்டால், மனோஜூக்கு ஆன்மா சாந்தியடையாதா? இருக்கும்போது ஆதரவாக இல்லாமல் எதுக்கு இதெல்லாம்? நான் நாத்திகம் பேசவில்லை. ஆனால், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, பிறருக்கு உதவியாக இருக்கலாம் என்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications