chithi 2 serial: சித்தீதீதீதீதீதீதீ... 2 வந்தாச்சு.. அப்ப ராசாத்தி கதி!?
சென்னை: ராதிகா சரத்குமாரின் சித்தி 2 சன் டிவியில் வரும் 27ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு என்று அதிகாரப்பூர்வமாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.
சன் டிவியில் வழக்கமாக அந்த நேரத்துக்கு ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலுக்கான நேரம் எப்போ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சித்தி 2 சீரியல் ப்ரோமோ ராதிகா சித்தியாக வர பின்னணியில் கண்ணின் மணி கண்ணின் மணி என்கிற நித்யஸ்ரீயின் குரல் பாடலும் ஒலிக்கிறது.

பொங்கல் விடுமுறை
நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறை... அத்துடன் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களும் பொங்கல் விடுமுறையோடு சேர்த்து தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால் ராசாத்தி சீரியலுக்கான நேரம் பற்றிய அறிவிப்பை சன் டிவி இன்னும் அறிவிக்கவில்லை.

ராசாத்தி சீரியல்
ராசாத்தி சீரியலில் ஒரு கல்யாணம் ரொம்ப இழுபறியாக இருக்க, அதற்கென தனியாக ஞாயிறு டபுள்ஸ் கொண்டாட்டத்தை நிறுத்தி, சன் குடும்ப விருதுகள் முடிந்த கையோடு ஒரு மணி நேரத்தை ராசாத்தி சீரியலுக்கு சன் டிவி வழங்க, அந்த நேரத்தில் திருமணத்தை முடித்தது ராசாத்தி சீரியல்.

9 மணி நேரம்
இந்த 9 மணி நேரத்தைத்தான் ராதிகாவின் சித்தி 2 வுக்கு வழங்கி இருக்கிறது சன் டிவி. வழக்கமா ரடான் டிவிக்கு சன் டிவி வழங்கி வந்த நேரம் என்பது 9:30 மணி நேரம்தான். இப்போது அந்த நேரத்தை சுந்தர் சி.யின் தயாரிப்பு நிறுவனம் பிடித்துக் கொண்டுள்ளது. இதற்கிடையில் ராசாத்திக்கான நேரத்தை சன் டிவி எப்போது ஒதுக்கித் தரும் என்று தெரியவில்லை.

சித்தி 2 -செம்பருத்தி
இப்போதைய காலக்கட்டத்தில் இரவு 9 மணி நேரம் என்பதுதான் அனைத்து தொலைக்காட்சிகள் இடையேயான ப்ரைம் டைம் சீரியல் காஸ்டிங் டைமாக பார்க்கப்படுகிறது. விஜய் டிவியில் எந்த சீரியலும் இந்த நேரத்தில் இல்லை என்றாலும், ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் இருந்து பலரையும் ஈர்க்க சன் டிவி சித்தி 2 வுக்கு இந்த நேரத்தை ஒதுக்கித் தந்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications