Chithi 2 Special: இன்று முதல் சித்தி 2.. முதல் நாள் மட்டும் ஒரு மணி நேரமாமே!
சென்னை: சித்தி 2 ஸ்பெஷல் ஞாயிற்று கிழமை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். நடிகை ராதிகா, பொன்வண்ணன் இவர்களுடன் சித்தி 2 சீரியல் குடும்ப நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
ராதிகாவுக்கு டான்சர்கள் பூத்தூவி வரவேற்பு கொடுத்து நடனம் ஆடினர். அதன் பின்னர் மாலை மரியாதை ஆரத்தி என்று தூள் கிளப்பியது சன் டிவி.
நிகழ்ச்சி முடிந்து கடைசியாக பெரிய கேக்கையும் வெட்டி இன்று முதல் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலுக்கு வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். அதன்படி இன்று மட்டும் சித்தி 2 இரவு 9 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை ஒளிபரப்பாகும் என்றும் ராதிகா சரத்குமார் கூறினார்.

கலாநிதி மாறன்
மிஸ்டர் கலாநிதி மாறன் தான் கதையை சொல்லும்போது, இதற்கு சித்தி 2 என்று வைத்தால்தான் சரியாக இருக்கும் என்று கூறினார். அது போல நாங்கள் இந்த சீரியலுக்கு வேறு பாடல் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு போயிருந்தோம். வேண்டாம், கண்ணின் மணி பாடல்தான் பொருத்தமாக இருக்கும். சரியாகவும் இருக்கும்னு சொன்னார். அவரோட ஐடியாவின் படிதான் சித்தி 2 என்று பெயர் வைத்தோம். அதே மாதிரி அதே டைட்டில் பாடலையும் எடுத்துக்கொண்டோம், என்று ராதிகா கூறினார்.

டாக்டர் கலைஞர்
டாக்டர் கலைஞர் அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். தினமும் சித்தி பார்த்துட்டு, காலையில் 5 மணிக்கெல்லாம் போன் செய்வார். ஒரு சமயம் பாராட்டுவார்.. ஒரு சமயம் இந்த கதாபாத்திரம் இந்த வசனம் பேசி இருக்கே.. எது சரியான்னெல்லாம் கேட்பார். என்னைவிட சிவகுமார் அண்ணன் கிட்டே ரொம்ப சித்தி பத்தி பேசுவார்.கதாபாத்திரங்களின் வசனம் பற்றித்தான் அதிக நேரம் பேசுவார் என்றும் ராதிகா கூறினார்.

என்மீது நம்பிக்கை
என் மீது நம்பிக்கை வச்சு இருக்கும் கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சொல்லணும். வாணி ராணி கதை எல்லாம் ஒரே லைன்தான் அவரிடம் சொன்னேன். வாணி ராணி சிஸ்ட்டர்ஸ்.. ஒருத்தி படிச்சவ, ஒருத்தி படிக்காதவ இப்படித்தான் சொன்னேன். சரி சரி.. நல்லாத்தான் இருக்கும்னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டார். இது சரி வராதுன்னு அவர் சொன்னாலும் அது சரியாய் இருக்காது. அவர் விமர்சனத்தையும் நான் சரியான முறையில் எடுத்துக்குவேன் என்று சொன்னார் ராதிகா.

சாரதா சண்முகம்
சித்தி 2 வில் சாரதா என்கிற குடும்ப பெண்ணாகவும், பொன்வண்ணன் இவரது கணவராக சண்முகம் என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இது இன்னொரு சித்தியின் கதை என்று கூறிய ராதிகா சரத்குமார், நடுத்தர வர்க்கத்து குடும்ப கதை. அதோடு கதையில் நல்ல மெசேஜும் இருக்கும் என்று சொன்னார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications