Chithi 2 Serial: வரும் ஞாயிறு சித்தி 2 ஸ்பெஷல் டைம்!
சென்னை: வரும் ஞாயிறு அன்றைக்கு சன் டிவியின் ஒரு மணி நேர ஸ்பெஷல் ஸ்லாட்டில் சித்தி 2 ஒளிபரப்பாக உள்ளது. இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
சித்தி முதல் சீசன் போல சித்தி 2 இல்லை என்று பலரும் பரவலாக பேச ஆரம்பித்து உள்ளனர். கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா டைட்டில் சாங் ஒளிபரப்புவதற்கு ஏற்ற மாதிரி சீரியல் கதை ஒர்த்தாக இல்லை என்றும் பேசி வருகிறார்கள்.
ராதிகா சரத்துக்குமார் நடிக்கும் சாரதா கேரக்டர் மருமகளுடன் போட்டி போடும் மாமியாராக மட்டுமே சித்தரிக்கப்பட்டு இருப்பது ராதிகாவுக்கு ஏற்ற மாதிரி இல்லை என்றும் சொல்கிறார்கள்.

நிஜத்தில் ராதிகா
ராதிகா சரத்குமார் நிஜத்தில் பல விஷயங்களை ஜெயித்து, ஒரு பெண்ணாக நல்ல ஒரு இடத்தை அடைந்துள்ளார். இவர் பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர.. மீண்டும் மாமியார், மருமகள் பிரச்சனை.. மருமகளை வில்லியாக சித்தரிக்கும் கதைகளில் ராதிகா நடிப்பது... இப்படிப்பட்ட கதைகளை சீரியலாக தயாரிப்பது என்பது ராதிகா போன்ற சாதனை பெண்களுக்கு அவசியம்தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இயக்குநர் மாற்றம்
ஜனவரி 27ம் தேதி சித்தி 2 சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. இரண்டு மாதம் முழுசாக முடிவதற்குள் இயக்குநரை மாற்றி இருக்கார் ராதிகா. கதையில் மாற்றம் வேண்டுமே தவிர இயக்குநரை மாற்றி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது பல வெற்றி சீரியல்களை தந்த ராதிகாவுக்குத் தெரியாதா என்ன... இருந்தாலும் எதற்காக ராதிகா இப்படி செய்தார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கதையில் பிரமாண்டம்
கதையில் பிரமாண்டம் என்றும் ஒன்று இல்லை.. சாதாரண எளிய குடும்பத்து கதை போலவும் இல்லை. பார்த்த முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் அன்றாட எபிசோட் முடிந்து விடுவது என்பதை ரசிகர்களால் ஜீரணிச்சுக் முடியவில்லை... இது போன்ற காரணங்களால் சித்தி 2 சீரியலை ரசிக்க முடியவில்லை.

ஞாயிறு 1 மணி நேரம்
இப்படியான சமயத்தில்தான் வழக்கம் போல சன் டிவி ஒவ்வொரு சீரியலுக்கும் ஒதுக்கித்தருவது போல வரும் ஞாயிறு அன்று இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரையான ஸ்பெஷல் ஸ்லாட்டை சித்தி 2 சீரியலுக்கு ஒதுக்கித் தந்துள்ளது. கடந்த முறை கண்மணி சீரியல் இந்த ஸ்லாட்டை கண்மணி சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பயன்படுத்திக்கொண்டது. கல்யாண வீடு சீரியல், ஸ்வேதாவை புருஷனுடன் சேர்த்து வைக்க பயன்படுத்திக்கொண்டது. இதற்கு முன்னர் ராசாத்தி சீரியலுக்கு ஒதுக்கிய டைமை ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்க அந்த சீரியல் பயன்படுத்திக் கொண்டது. சித்தி 2 இந்த ஸ்பெஷல் ஸ்லாட்டை எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications