Chithi 2 Serial: அதே கண்.. அதே மணி.. அதே சென்டிமென்ட்.. களத்தில் குதித்த சித்தி 2!
Recommended Video
சென்னை: நேத்து இரவு 9 மணிக்கு அத்தனை பேர் வீட்டிலும் ஒரே சத்தம்தான்.. கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா.. பாட்டுதான் ஒலித்தது. சன் டிவியின் சித்தி 2 சீரியல் இப்படியாக தனது முதல் அத்தியாயத்தை நேற்று தொடங்கியது.
ராதிகாவின் அறிமுகக் காட்சியும் அதே தண்ணீரில் என்று அமைந்து சித்தி முதல் பாகத்தின் சென்டிமென்ட்ஸ் காட்சிகள் சித்தி 2 விலும் தொடர்ந்தது இன்னொரு புறம்.
ராதிகாவுக்கு யானை மாலை போட்டு வரவேற்றது... ராதிகா இந்த முறை சித்தி என்று அழைக்கும் குழந்தைக்கு பாட்டியாக நடித்து இருப்பது என்று எல்லாமே பார்க்க நன்றாக இருக்கிறது.

ஒரு மணி நேரம்
22 வருடங்களுக்கு முன்பு சித்தியின் கதை தொடங்கியது எப்படி என்று சொல்ல வேண்டி இருந்ததால், சீரியல் டெலிகாஸ்ட்டுக்கு ஒரு மணி நேரம் தேவைப்பட்டது போலும். இதை பிளான் செய்துதான் சன் டிவியும் ராசாத்தி சீரியலுக்கு ஒரு ஞாயிறு அன்று ஒரு மணி நேரத்தை வழங்கிவிட்டு, நேற்று ராசாத்தியின் அரை மணி நேரத்தை சித்தி 2 சீரியலுக்கு வழங்கியது போலும். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாத்தான் இருக்கு.

அக்கா நடிகை ரூபிணி
ராதிகாவின் ஃ பிளாஷ்பேக் அக்காவாக நடிகை ரூபிணி நடித்து இருக்கார். இவர்தான் ரஜினியுடன் காளை காளை முரட்டு காளை பாடலுக்கும், கமலுடன் சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடலுக்கும் நடனமாடியவர். நினைவு வருவதற்காக அப்படி சொன்னோம். ரூபிணி நிறைய படங்களில் நடித்த நடிகை. கமல், ரஜினி, சத்யராஜ் என்று பல ஹீரோக்களுடன் படங்களில் நடித்து இருக்கிறார். இதில் இவரை அடையாளமே தெரியவில்லை.

பேசும் வாய்ப்பு இல்லை
சித்தி 2 சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகியும், ராதிகாவுக்கு அவ்வளவாக பேசும் வாய்ப்பு இல்லை. அவ்வப்போது ஏதாவது பேசி இருக்கிறார். ராதிகா ஒரு டீச்சராகவும் சித்தி 2 சீரியலில் நடிப்பதால், இன்னும் இன்னும் என்று வரும் எபிசோட்களில் ராதிகாவின் கதாபாத்திரத்தின் அழுத்தத்தை எதிர்பார்க்கலாம். எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் கதையின் ஆரம்பமே அசத்தலாக இருப்பதால், வெற்றி களத்தில்தான் சித்தி 2 இப்போதைக்கு உள்ளது.

வெற்றி களத்தில் சித்தி 2
டைட்டில் பாடலே டிவியின் முன் அனைவரையும் கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டது. குழந்தை பெட்டிக்குள் குதித்து, தாழ் தானாக போட்டுக்கொண்டது என்று பதை பதைக்கும் காட்சியோடு, அந்த ஆரம்ப எபிசோடுக்கு தொடரும் போட்டுவிடுவார்களோ என்று பார்த்தவர்கள் பதறிய நிலையில், நல்லவேளை, குழந்தையை ராதிகா கண்டு பெட்டியில் இருந்து தூக்கியும் விட்டார். நல்ல ஆரம்பம்!
பார்க்கலாம்.. போகப் போகத்தான் தெரியும்.. சித்தி ஸ்வீட்டா இல்லை காரமான்னு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications