Chithi 2: டோன்ட் ஒர்ரி.. சித்தி 2 திங்கள்கிழமைல இருந்து வருது.. பி ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்தி 2 சீரியலின் புதிய பகுதிகளை திங்கள்கிழமைல இருந்து ஒளிபரப்பப் போறாங்க. இதுதான் ஹாட் நியூஸாக இருக்கிறது.

ராதிகா சரத்குமாரின் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பை ஆரம்பித்த புதிதில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது .பலரும் இந்த சீரியல் பக்கம் திரும்பி வந்தனர் .சித்தி முதல் பாகம் அளவுக்கு ஆரம்பம் இல்லை என்றாலும் கூட எதிர்பார்ப்பை அதிகரித்தது 2வது பாகம்.

ஆனால் நேரம் பாருங்க, கொரோனா வந்து சீரியல்களை நிறுத்தி விட்டது . அதில் சித்தி 2 சீரியலும் ஒன்று . புதிய சீரியல் எல்லாம் நின்று போகவே எல்லா சானலிலும் பழைய பகுதிகளையே திரும்பத் திரும்பக் காட்டி வந்தனர்.

 தொடரும் லாக்டோன்

தொடரும் லாக்டோன்

இப்போது லாக்டோன் தொடர்ந்து கொண்டிருக்கிறது .ஆனால் அரசின் அனுமதியோடு மிகுந்த பாதுகாப்புடன் சீரியல் ஷூட்டிங்குகள் ஆரம்பித்துள்ளன .எனவே பல சீரியல்கள் மீண்டும் புத்துயிர் பெற்று புதிய பகுதிகளுடன் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது. அதில் சித்தி 2 சீரியலும் இப்போது இணையவுள்ளது. அதாவது திங்கள்கிழமை முதல் புதிய எபிசோடுகளை ஒளிபரப்பப் போகின்றனர் சித்தி 2 சீரியல் தயாரிப்பு நிறுவனத்தினர்.

 சித்தி 2 புதிய பகுதிகள்

சித்தி 2 புதிய பகுதிகள்

இதுதொடர்பாக சித்தி 2 நாயகியான ராதிகா சரத்குமார் ஒரு டிவீட்டும் போட்டுள்ளார் . அந்த டிவீட்டில் ராதிகா சரத்குமார் வீட்டில் கம்பீரமாக சித்தி வேடத்தில் அமர்ந்திருக்கிறார். கூலிங் கிளாஸ் போட்டபடி பெண் சிங்கமாக அமர்ந்துள்ளார் . அவர் உட்கார்ந்துள்ள சேர் ரெடிமெட் மடக்கு சேர் போல தெரிகிறது .அதாவது எங்கு போகிறோமோ அங்கு எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்து கொள்ளலாம்.

 புதிய சேரில் மேடம்

புதிய சேரில் மேடம்

இந்த சேர் கூட பாதுகாப்பானதுதான் .எங்கு போகிறோமோ அங்குஉள்ள சேரில் அமர்ந்தால் கொரோனா தொற்று பரவக் கூடும் .எனவே இதுபோன்ற ரெடிமேட் சேரை எல்லோரும் பயன்படுத்தினாலும் கூட அது பாதுகாப்புதான் . நம்ம சேரில் யாரும் அமரவும் மாட்டாங்க .நமக்கும் பாதுகாப்பா இருக்கும் இல்லையா. அந்த வகையில் ராதிகாவின் இந்த புத்திசாலித்தனத்தை நாம பாராட்டாமல் இருக்க முடியாதுங்க.

 பத்திரமாக வாங்க போங்க

பத்திரமாக வாங்க போங்க

ராதிகாவின் இந்த டிவீட்டில் அவர், சித்தி2 ஷூட்டிங் மோட். அனைவரும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள். பத்திரமாக வந்து பாதுகாப்புடன் திரும்ப வேண்டும். இயல்பு நிலையை அனுபவிப்போம்.. விரைவில் என்று மெசேஜ் போட்டுள்ளார் ராதிகா மேடம் .சிங்கம் போல அவர் அமர்ந்திருக்கும் இந்தக் காட்சியை ரசிகர்களும் ரொம்பவே ரசிக்கிறாங்கங்க.

 நீங்க சிங்கம் மேடம்

நீங்க சிங்கம் மேடம்

நீங்க எப்பவுமே சூப்பர் மேடம், நீங்க சிங்கம் மேடம்,, உங்க ஸ்டைலே தனிதான் மேடம் என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை தட்டி விட்டு சந்தோஷப்பட்டு வருகின்றனர் .வாழ்த்துகள் அக்கா என்றும் பலர் கமெண்ட் போட்டுள்ளனர் .புதிய எபிசோடுகளைப் பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக உள்ளனர். அந்த வகையில் சித்தி 2 சீரியலின் எதிர்பார்ப்பும் அதிகம்தாங்க .ராதிகா முன்பு தயாரித்து வந்த ஒரு சீரியல் சரியாகப் போகவில்லை.

 புதிய எதிர்பார்ப்பு

புதிய எதிர்பார்ப்பு

இதையடுத்து இடையில் சன் டிவி பக்கமே அவர் திரும்பிப் பார்க்காமல் கோடீஸ்வரி புரோகிராமுக்குப் போய் விட்டார். அங்கு போய் விட்டு திடீரென சித்தி 2 சீரியலை அறிவித்து சூட்டோடு சூடாக தொடங்கவும் செய்தார் .ஆனால் லாக்டோன் வந்து எல்லாவற்றையும் குழப்பி விட்டது. இந்த நிலையில் மீண்டும் சித்தி2 எபிசோடுகள் வரப் போவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் தந்துள்ளது என்று கூற வேண்டும் .பார்க்கலாம் சித்தி 2 மீண்டும் ரசிகர்களை வசீகரிக்குமா என்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+