Chithi 2 Serial: சித்தி 2 இன்னும் சீரியஸாகலைங்கோ.. கொஞ்சம் ஜாலி...கொஞ்சம் ஜோலி!
Recommended Video
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல், வழக்கமான சீரியல்கள் போல அத்தனை சீரியஸ் இல்லை. ராதிகா சரத்குமார் இந்த சீரியலில் நடிகை ஊர்வசி பாணியில் கொஞ்சம் காமெடி செய்து நடித்து வருகிறார்.
எப்போதும் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்கும் ராதிகாவை சித்தி 2 சீரியலில் எல்லா பெண்களையும் போல சாதாரணமாக காண்பித்து இருப்பது பார்க்க நன்றாக இருக்கிறது.
ஒரு லட்சியம், ஒரு கனவு... இதை நோக்கிய பயணம் சாரதா சண்முகம் கதாபாத்திரங்களின் பயணம். சண்முகத்தின் தங்கையாக நடிக்கும் ஷில்பா கதாபாத்திரமும் வழக்கமாக குடும்பத்தில் இருக்கிற பெண்கள் மாதிரியே இருப்பதால் வில்லி என்றும் சொல்லிவிட முடியாது.

அழுகை மன அழுத்தம்
தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல்களில் அழுகை, மன அழுத்தம் உள்ள பெண்மணி கதாபாத்திரங்கள் என்று பார்த்து பார்த்து பார்க்கிறவர்களுக்கும் அந்த மன அழுத்தம் தொற்றிக்கொள்வது என்று பார்க்கிறோம். அதோடு வில்லிகள் போடும் திட்டங்கள் இருக்கிறதே.. ஒருவரை கார்னர் செய்துக்கொண்டு, அவரை கொல்ல விதம் விதமான திட்டங்கள் போட்டு, அத்தனையும் விரல் நுனியில் தப்புவது என்றும் பார்த்து பார்த்து ரொம்ப கடுப்பாகி உட்கார்ந்து இருக்கிறார்கள்.

குடும்பத்தை பிரதிபலித்து
சித்தி 2 சீரியல் சண்முகம், சாரதா இவர்களின் வாழ்க்கை நடுத்தர மற்றும் சாதாரண குடும்பத்தை பிரதிபலிப்பது போல இருப்பதால், அந்த குடும்பமும் நம்மில் ஒரு குடும்பம் போலவே இருப்பதால் இப்போதைக்கு பார்க்க நன்றாக இருக்கிறது. வழக்கமான ராதிகா சீரியல் போன்று இது இல்லாமல் இருக்க வேண்டும். திடீரென்று ராதிகாவின் தலையில் பெரிய பொறுப்பை வைத்துவிட்டு, அதை நோக்கிய பயணமாக சித்தி 2 சீரியலும் இருந்தால் வழக்கமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் பத்தோடு பதினொன்றாக இந்த சீரியலும் இடம்பெற்று விடும்.

இரவு 9:30 ஸ்லாட்
இரவு 9:30 மணி நேர ஸ்லாட் என்பது பலர் படுக்கப் போகும் முன் டிவி பார்க்கும் நேரம். இந்த நேரத்தில் ஆதித்யா சானலைப் பார்த்தால் வாய்விட்டு சிரிக்கும்படியான காமெடிகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பலரும் நன்றாக சிரித்துவிட்டு அதே மன நிலமையில் படுக்கப் போகலாம் என்று ஆதித்யா சானலை பார்க்கும் நேரம். இந்த நேரத்தில்தான் சித்தி 2 ஒளிபரப்பாகிறது. வீட்டு பெண்கள் இதை பார்க்க உட்காருகையில், அவர்களோடு ஆண்களும் பார்க்கலாம் என்று உட்கார்ந்தால் வீணான டென்ஷானை தரும் சீரியலாக சித்தி 2 இல்லாமல் இருந்தால்தான் வெற்றி.

இதுவே தொடர்ந்தால்
கடந்த 4 நாட்களில் முதல் நாள் தவிர்த்து மற்ற மூன்று நாட்களும் லைட் வெயிட்டாகத்தான் கதை சென்று கொண்டு இருக்கிறது. இதே பாணியில் சித்தி பயணித்தால் நிச்சயம் ஒரு வித்தியாசமான சீரியலாக இது இருக்கும். சன் டிவியில் வித்தியாசமாக ஒளிபரப்பாகும், அதே சமயம் ரடானில் இருந்து வித்தியாசமாக ராதிகாவுக்கு என்று எடுக்கப்பட்ட சீரியலாகவும் இது இடம் பிடிக்கும். ஒரு மனை வாங்கிப் போட்டாச்சு.. அதில் ஒரு வீடு கட்டணும். இதுதான் சாரதா சண்முகத்தின் லட்சியம் என்று லேசான கதையாக இப்போதைக்கு சித்தி 2 சீரியல் இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications