chithi 2 serial: சித்தி 2... கேக் வெட்டி ஆரம்பிச்சு வைக்கறாய்ங்க!
சென்னை: வருகிற திங்கள் 27 முதல் சன் டிவியில் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு முந்தைய தினமான ஞாயிறு அன்று கேக் வெட்டி சீரியலைத் துவக்கி வைக்கிறார்கள்.
வரும் ஞாயிறு அன்று இரவு 9:30 மணிக்கு சித்தி 2 சீரியலை ராதிகா கேக் வெட்டி துவக்கி வைக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராதிகா, பொன்வண்ணன் மற்றும் சித்தி 2 சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்து உள்ளனர். சீரியலில் உடன் நடிக்கும் பொன்வண்ணனை ராதிகா சீரியல் கதைப்படி மாமா என்று அழைக்கிறார்.

சித்தி 2 சீரியல்
சன் டிவி சீரியல் வரலாற்றிலேயே சீசன் சீரியல் வருகிறது என்றால், அது சித்தி 2 சீரியல்தான். வேறு எந்த சீரியலும் சீசன் என்று தடம் பதிக்கவில்லை. நடிகை ராதிகாவுக்கு சித்தியில் ஆரம்பித்து வாணி ராணி சீரியல் வரை எல்லாமே ஹிட் என்கிற சூழலில் சந்திரகுமாரி சீரியல் ரேட்டிங்கில் இடம் பிடிக்கவே இல்லை.

நேரத்தை மாற்றி
இதனால் சற்றே அதிருப்தி அடைந்த சன் டிவி, வேறு வழி இல்லாமல் ராதிகாவின் ரடான் தயாரிப்பான சந்திரகுமாரி சீரியலுக்கான நேரத்தை சற்றும் எதிர்பார்க்காத வகையில் மாலை 6:30 மணிக்கு மாற்றி கொடுத்தது.இதில் நடிகை ராதிகா அதிருப்தி ஆனார். சந்திரகுமாரி சீரியலில் தொடர்ந்து நடிக்கவும் ராதிகாவுக்கு இஷ்டம் இல்லாமல் போனது.

முதல் தோல்வி
சின்னத்திரையில் தோல்வியை சந்திக்காத ராதிகா சந்தித்த முதல் தோல்வி இந்த சந்திரகுமாரி சீரியல் என்று சொல்லலாம். இதனால் இந்த சீரியலில் நடிப்பதில் இருந்து ராதிகா சட்டென்று விலகிக் கொண்டார். எப்போது சந்திரகுமாரி 6:30 ஸ்லாட்டில் ஒளிபரப்பாக ஆரம்பித்ததோ..அன்றிலுருந்து அந்த சீரியலில் ராதிகா இல்லவே இல்லை.

சந்திரகுமாரி முடிவு
சந்திரகுமாரி சீரியல் விரைவில் முடிவுக்கும் வந்தது. சன் டிவியில் அந்த நேரத்தில் இப்போது வேறு தயாரிப்பு நிறுவனத்தின் அழகு சீரியல் ஒளிபரப்பாகி அந்த நேரத்துக்கான நல்ல ரேட்டிங்கில் உள்ளது. ராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் மட்டும்தான் முடிவுக்கு வந்ததே தவிர, ராதிகா நிறுவனமான ரடான் தயாரிப்பில் மதிய நேரத்துக்கான ஸ்லாட்டில் சீரியல் ஒளிபரப்பாகித்தான் வருகிறது.

சன் டிவியுடனான உறவு
ராதிகாவுக்கும் சன் டிவிக்குமான உறவில் எந்த விரிசலும் இல்லாததால், சிறிது கேப் விட்டு யோசித்ததன் விளைவே சித்தி 2 சீரியல் துவக்கம். ராதிகாவின் சின்னத்திரை மார்க்கெட்டை மறுபடியும் தூக்கி நிறுத்த சித்தி 2 என்றால் மட்டுமே முடியும் என்கிற நிலைமை. வேறு என்ன அறிவித்தாலும் மக்களை அந்த சீரியல் முன் கட்டிப்போட முடியுமா என்கிற சதேகத்தில் முளைத்து இருப்பதே சித்தி 2.

திருமதி செல்வம் தென்றல்
இனி சீசன் என்று சீரியல்கள் அணிவகுக்கும்.. அந்த வரிசையில் இப்போது நந்தினி 2 அறிவித்துள்ளார்கள். அடுத்து வெற்றி பெற்ற சீரியல்கள் வரிசைப்படி பார்த்தால் திருமதி செல்வம், கோலங்கள், தென்றல் மதிய நேர சீரியல்களான சொந்தம், அத்திப்பூ இப்படி சீசன் வரிசைகள் நீண்டுகொண்டே போகலாம்.

மார்க்கெட்டிங் யுக்தி
மார்க்கெட்டிங் யுக்தியில் சீசன் 2 எனும்போது அதற்கென்று தனி மவுசு உள்ளது. அதுவும் அதன்படி பார்த்தால் அதிக வெற்றி சீரியல்களை கைவசம் வைத்து இருக்கும் சன் டிவிக்கு எந்த விதத்திலும் எப்போதும் தனி மார்க்கெட் உள்ளது. சன் டிவியில் இனி அதிக சீரியல்கள் சீசன் 2 என்று ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications