Chithi 2 serial: ஆத்தாடி.. அடுத்த சித்தி வந்தாச்சு.. 2020ல் இருக்கு செம ட்ரீட்!
சென்னை: சித்தி2 எப்பப்பா வரும்.. இதுதான் பல டிவி நேயர்களின் கேள்வியாக இருந்தது. அதற்குப் பதில் சொல்லி விட்டார் சித்தி ராதிகா.
ராதிகா சரத்குமாரின் கேரியரிலேயே பெஸ்ட் சீரியல் சித்திதான். அதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இப்போது அடுத்த பாகத்திற்கு சித்தி ராதிகா ரெடியாகி விட்டார்.. ஆனால் சித்தியாக நடிக்கப் போவது யார் என்றுதான் தெரியவில்லை.

22 நேற்றுதான்
22 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற டிவி சீரியல்தான் சித்தி. இந்த சீரியல் நேற்றுதான் தனது 22வது வருடத்தைக் கொண்டாடியது. இந்த சீரியல் வந்தபோது குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்து ரசித்தனர்.

வைரமுத்து பாடல்
ராதிகாவின் பண்பட்ட நடிப்பு, சிவக்குமாரின் இன்னொரு பரிமாணம், வைரமுத்துவின் டைட்டில் பாடல், தீனாவின் இசை அருமையான கதை, அட்டகாசமான நடிப்பு என்று அனைத்து விதங்களிலும் சிறப்பான பேக்கேஜ் ஆக இருந்ததுதான் சித்தி நெடுந்தொடர்.

எங்கும் பேச்சு
அடுத்து சித்தி 2 வரப் போவதாக கொஞ்ச நாளாக பேச்சு அடிபட்டு வந்தது. தற்போது அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராதிகா. சித்தி தொடரின் 22வது வருடமான நேற்று இதுதொடர்பான டிவீட்டை அவர் இரவில் போட்டுள்ளார்.
|
ட்வீட் ராதிகா
ராதிகா போட்டுள்ள டிவீட்டில், சன் டிவியும், ரேடானும் சித்தி 2 வது பாகத்தை அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம். ஜனவரி முதல் சித்தி 2 ஒளிபரப்பாகும். இது இன்னொரு சித்தி. இயக்கவிருப்பவர் சுந்தர் கே விஜயன் என ராதிகா குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. குதூகலிக்க வைத்துள்ளது.

நடிப்பாரா ராதிகா?
சித்தி 2வது பாகத்தில் ராதிகா நடிப்பாரா என்பது அடுத்த கேள்வியாகும். காரணம், சமீபத்தில் சன் டிவியுடன் மனக் கசப்பு ஏற்பட்டதால் அங்கு நடிப்பதை நிறுத்தி விட்டார் ராதிகா. அவரது பல தொடர்களும் கூட நிறுத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில் மீண்டும் சன் டிவிக்கு அவரது சித்தி வரவுள்ளது. ஆனால் சித்தியாக அவர் நடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
|
ரசிகர்கள் குஷியில்
தனது டிவிட்டிலும் கூட இன்னொரு சித்தியின் கதை என்றுதான் ராதிகா குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த சித்தி யாராக இருக்கக் கூடும் என்று அனைவரும் மூளையைக் கசக்கிக் கொண்டுள்ளனர். கசக்குங்க கசக்குங்க நல்லா கசக்குங்க.. அடுத்த சித்தி வரும் வரை. ஆனால் ரசிகர்கள் இந்த சித்தி 2 அறிவிப்பை வரவேற்க ஆரம்பித்து விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications