minnale serial: மின்னலே சீரியலில் நம்ம யுவராணி.. சித்தி 2 விலும் வருவாரா?
சென்னை: சன் டிவியின் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் மின்னலே சீரியலில் நடிகை யுவராணி கமலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்து வந்தார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ரடான் புரடக்ஷன் கம்பெனி தயாரிப்புத்தான் மின்னலே சீரியல். கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நிரோஷாதான் கமலாவாக நடித்து வந்தார்.
பல வருடங்கள் சின்னத்திரையில் முகம் காண்பிக்காமல் இருந்த நடிகை யுவராணி, இப்போது சன் டிவியின் மின்னலே சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று யுவராணி, கமலாவாக நடிக்கிறார்.

சித்தி முதல் சீசன்
சித்தி முதல் சீசனில் சித்தி ராதிகாவுக்கு வில்லியாக நடித்தவர் யுவராணிதான். சித்தி குடும்பத்தை கெடுப்பது, மகன் பிரசாத்தை தான் ஆட்டுவிக்கும் பொம்மையாக எமோஷனலாக மாற்றி, அவன் மூலமாக தான் நினைத்ததை சாதித்துக் கொள்வது என்று நடிப்பை வெளிப்படுத்தும் அருமையான கதாபாத்திரம் யுவராணிக்கு.

சித்தி 2 சீரியல்
சித்தி 2 சீரியல் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், முதல் பாகத்தில் மிக அருமையான கதாபாத்திரம் ஏற்று நடித்த யுவராணி சித்தி 2 வில் வருவாரா என்கிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை. இந்த நேரத்தில்தான் சன் டிவியில் இதே ராதிகாவின் தயாரிப்பு நிறுவனத்தின் மின்னலே சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இருக்கார் யுவராணி.

நடிகை நிரோஷா
மின்னலே சீரியலில் நடிகை நிரோஷா அதாவது ராதிகாவின் தங்கை நடித்து வந்தார். அண்மை காலமாக நிரோஷாவுக்கு இந்த சீரியலில் இரட்டை வேடம். இதில் சென்னை பாஷை பேசும் ரவுடி பெண் கதாபாத்திரத்திலும் நிரோஷா நடித்து வந்தார். என்ன காரணத்தினாலோ இப்போது இவர் சீரியலில் இருந்து விலகிவிட, இவருக்கு பதில் யுவராணி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யுவராணி கூறியது
சிறிது நாட்களுக்கு முன்னர் யுவராணி, தன்னுடைய மேக்கப் மேனை சந்தித்து புதிதாக மேக்கப் போட்டுக்கொண்டு ஒரு வீடியோ பேசி பதிவிட்டு இருந்தார். அதில் என்னுடைய மேக்கப் மேன் நான் சினிமாவில் நடிச்சுகிட்டு இருந்தபோதில் இருந்து இவர்தான் எனக்கு மேக்கப் போட்டுவிடுவார். இப்போ பிரேக்குக்குப் பிறகு ஒரு சீரியலில் நடிக்கப் போறேன். அதுக்குத்தான் இவர்கிட்டே மேக்கப் போட்டுக்க வந்தேன் என்று கூறி இருந்தார். அதன்படி மின்னலே சீரியலில் நடிக்க ஆரம்பித்து இருக்கார். பொறுத்திருந்து பார்க்கலாம், இவர் சித்தி 2 வில் வருகிறாரா இல்லையா என்று.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications