Chithi Serial: கடவுளே...மொடா குடிகாரன் ... கிருஷ்ணாவா இது?
சென்னை: 90ஸ் கிட்ஸ் பார்த்து மகிழ்ந்த சித்தி கோவிட் 19 தொற்று காரணமாக மறு ஒளிபரப்பாகி வருது. சில பேர் சீரியலை ஒரு வாரம்தான் பார்க்கலை.... ராமுவோட நண்பன் கிருஷ்ணன் அதுக்குள்ளே மொடா குடிகாரனா மாறிட்டாரே....!
ஆரம்ப கட்டத்தில் கதை விறு விறு என்றுதான் நகர்கிறது. இன்னும் போகப் போக எப்படி இருக்குமோ என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ராமுவை பழிவாங்க, அவனின் நண்பன் கிருஷ்ணாவை திருமணம் செய்துக்கொண்டு, அவனை குடிகாரனாக மாற்றி அழகு பார்ப்பது என்பது பிரபா போன்ற பெண்களால்தான் முடியும்.
சித்தி சீரியலில் நடிகை யுவஸ்ரீ காட்சிக்கு காட்சி அழகழகான உடை என்று அசத்துகிறார். பணக்கார வீட்டுப் பெண் என்று சொன்னால் நம்பும் அளவுக்கு அவரது உடைகளும், நடவடிக்கைகளும் இருக்கிறது.

கிருஷ்ணா ராமு
ஸ்ரீரங்கத்தில் பிறந்த ராமுவும், கிருஷ்ணாவும் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள். ராமு சென்னை கிளம்பியபோது கிருஷ்ணனும் கூடவே வந்துவிட. பாவம் கிருஷ்ணனுக்குத்தான் இது போறாத காலம் ஆகிவிட்டது. பிரபா வம்படியாக வந்து கிருஷ்ணனை கல்யாணம் செய்துக்கொண்டு, படாத பாடு படுத்திவிடுகிறாள்.

குடிகாரன் லட்சியம்
பிரபா தான் காதலித்த ராமுவுக்கு பாடம் கற்பிக்க, அவனது உற்ற நண்பனான, தான் வேண்டா வெறுப்புக்கு கல்யாணம் செய்துக்கொண்ட புருஷன் கிருஷ்ணனை குடிகாரனாக்கி விட வேண்டும் என்கிற லட்சியத்துடன் பயணித்து, கூடிய விரைவில் வெற்றியும் கண்டுவிட்டாள். ஒரே வீட்டில் இருந்த ராமுவுக்கு, சாரதாவுக்கும்.. ஏன் குழந்தை காவேரிக்கு கூட இந்த விஷயம் தெரியலை பாருங்களேன்...!

குடிக்கலேன்னா போச்சு
கிருஷ்ணாவால் குடிக்காமல் இருக்க முடியாதாம்... குடிக்கலேன்னா கால் ஒரு பக்கம், கை ஒரு பக்கம் என்று புது கற்பனையில் கிருஷ்ணாவின் உடம்பை குடி பாதிக்கிறது. நடிகர் சுரேந்தர் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்ளும்படி மிக நன்றாகவே நடித்து இருக்கிறார்.

சொந்த புத்தி
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழிக்கு ஏற்ப, பிரபாவின் கதாபாத்திரத்தை படைத்து இருக்கிறார்கள் ராமுவைப் பழி வாங்க வேண்டும் என்கிற ஆத்திரத்தில் மட்டுமே இருக்கும் பிரபாவுக்கு சொந்தபுத்தி வேலை செய்யவில்லை. பாப்பா... பாப்பா என்று தன்னை சுத்தி வரும் வேலைக்காரன் வேலு கெட்ட ஆலோசனைகளைத் தர...அதன்படி கிருஷ்ணாவை அவசர அவசரமாக கல்யாணம் செய்துக்கொண்டு, இப்படி சீரழித்து வருகிறாள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications