இது மூக்கு.. இது கண்ணு.. அழகு.. பேரழகு.. குழந்தையோடு குழந்தையான சித்து..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை கொஞ்சினால் எப்படி இருக்கும்.. இப்படித்தான் இருக்கும்.. அப்படி சொல்ல வச்சிருக்குங்க இந்த வீடியோ.

ஒரு வழியா இந்த லாக்டோன் டைமிலும் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைச்சாச்சு .இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல நடிகர்களுக்கும் செம கொண்டாட்டம் தான்.

இவ்வளவு நாளா வீட்டுக்குள்ளேயே இருந்து போர் அடித்து போயிருந்த நடிகர்களும் இன்று சூட்டிங் ஸ்பாட்டில் செம என்ஜாய் தான். அப்படித்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் படப்பிடிப்பு ஆரம்பிச்சாச்சு சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட்டம்தானாம்.

 அழகி சித்து

அழகி சித்து

டிவியில் தொகுப்பாளராக இருந்து சின்னத்திரையில் வந்து கலக்கி கொண்டிருப்பவர்களில் சித்துவும் ஒருவர். இவர் பணி புரியாத டிவி சேனலே இல்லை அப்படின்னு சொல்லலாம் .அந்த அளவுக்கு இவர் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது முழுக்க முழுக்க அவரது திறமை மட்டுமல்லாமல், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் முயற்சியும் மட்டும் தான்.

குழந்தைத்தனம்

குழந்தைத்தனம்

அவரோட ஜாலியான பேச்சும் துறுதுறு குழந்தைத்தனம் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்காம். நிகழ்ச்சி தொகுப்பாளராக ஒவ்வொரு டிவியில் பணிபுரிந்தாலும் இவர் எல்லாத் டிவி க்கும் செல்லப் பிள்ளைதான். தொகுப்பாளர் மட்டுமில்ல நடனத்திலும் கலக்கக் கூடியவர் சித்து. தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவர் நடிப்பில் பின்னி எடுத்து வருகிறார். முல்லை கேரக்டலில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

 எல்லோருக்கும் பிடிச்ச சித்து

எல்லோருக்கும் பிடிச்ச சித்து

இவருடைய நடிப்பு எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. துருதுரு சேட்டை பண்ணிக்கிட்டு இருக்கிற சித்து இந்த சீரியலில் அமைதியான முல்லை கேரக்டரில் நடித்திருக்கிறார். இவரின் ஜோடியாக கதிர் கேரக்டரில் நடித்திருப்பவருக்கும் இவருக்கும் இந்த சீரியலில் நல்ல கெமிஸ்ட்ரி. இருவரும் இணைந்து டான்ஸ் போட்டிகளில் கலந்து இருக்கிறார்கள். வேற லெவலில் இருக்கிறது இவர்களின் ஜோடிப் பொருத்தமும் நடிப்பும்.

 முல்லை கதிர் ரொமான்ஸ்

முல்லை கதிர் ரொமான்ஸ்

இருவரும் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள். இந்த ஜோடிக்கு ரசிகர்களிடையே நல்ல மவுசும் கூடியுள்ளது. இன்று வரையிலும் நிறைய ஸ்டேட்டஸ் சாங் இவர்களின் வீடியோ தான் இடம்பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு இவர்களை பிடித்திருக்கிறது. கொஞ்ச நாளா சீரியல் போடாததால் ரசிகர்கள் இவர்களை ரொம்பவே மிஸ் செய்தனர். இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளதால் அனைவரும் ஹேப்பாகியுள்ளனர்.

 அட இதுதான் சாம்பாரா!

அட இதுதான் சாம்பாரா!

இவர் தொகுப்பாளர் நடனக்கலைஞர் மட்டுமல்ல நல்ல சமையலும் செய்வார். சமையல் செய்வதை வீடியோ எடுத்து இணையதளத்தில் போட்டு இருக்கிறார் .இது ரசிகர்களை வாய்விட்டு சிரிக்கிற அளவுக்கு இருக்கிறது. இவருடைய பேச்சு எப்போ வுமே ஜாலியா இருக்கிற மாதிரி தான் இருக்கும் ஆனால் இவர் இந்த சமையல் வீடியோ எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. அந்த அளவில் சமையல் பண்ணி இருக்கிறார்.

 நல்லா சமைச்சீங்க போங்க!

நல்லா சமைச்சீங்க போங்க!

இது பாண்டியன் ஸ்டோர் சீரியல் எடுக்கப்பட்ட சீனாம். அதில் ஒரு கத்திரிக்காய் துண்டு ஒரு தக்காளி ஒரு பல்லாரி கொஞ்சம் தண்ணி இதுதான் அவங்களுக்கு சாம்பார். ஆம்லெட் போட்டிருக்காங்க ஆனா அது கருப்பாக இருக்கிறது. சாதம் என்கிற பெயரில் பொங்கலை காட்டுறாங்க. இதுதான் சமையல். இது வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது சமையலில் சித்து சின்னக் குட்டி என்று கலாய்ப்பாக காட்டியுள்ளார்.

 குட்டீஸ்னா இஷ்டம்

குட்டீஸ்னா இஷ்டம்

இதுபோக சித்துவுக்கு குழந்தைகள்னா ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். குழந்தைகளுடன் விளையாடுவது அவருக்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும் எவ்வளவு பிரச்சனை இருக்கும் போதும் குழந்தைகள் முகத்தை பார்த்தாலே அவ்வளவு பிரச்சினையும் தீர்ந்துவிடும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இப்போ கூட சூட்டிங் ஸ்பாட்டில் காருக்குள் இருந்து ஒரு குட்டி பாப்பாவ கொஞ்சிகிட்டு இருக்காங்க. இது கண்ணு மூக்கு வாய் என்று குழந்தையின் அழகை வர்ணித்து இருக்காங்க. இது வலைத்தளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டு வருகிறது.. அழகும், பேரழகும் கூடி கும்மியடித்தா இப்படித்தான் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+