சித்ராவின் பிறந்த நாள்.. கொண்டாட்ட வீடியோக்கள்.. சோகத்தில் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இதுவரைக்கும் சித்ரா நடித்திருந்த சீன்களை ஒளிபரப்பி வந்த நிலையில் கடைசி நாளாக தற்போது இன்று அவருடைய பிறந்தநாள் வீடியோக்களையும் ஒளிபரப்புகிறது.

அவருடைய ரசிகர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இன்றைய எபிசோட் வீடியோக்களை போட்டு தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள்.

விஜே சித்ராவிற்கு ஏற்கனவே கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பிறந்த நாள் முடிந்த நிலையில் அவர் அவருடைய ரசிகர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து எல்லாரையும் மீட் பண்ணுவதாக ப்ரோக்ராம் ரெடி பண்ணி இருந்தார்.

மிஸ்ஸான கொண்டாட்டம்

மிஸ்ஸான கொண்டாட்டம்

ஆனால் அன்று பெரிய மழையின் காரணமாக யாரையும் மீட் பண்ண முடியாமல் போனது. ஆனால் சீக்கிரத்தில் எல்லாத்தையும் மீட் பண்ணலாம் என்று அவர் எதிர்பார்த்த நிலையில் திடீரென்று எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்டதால் அவருடைய ரசிகர்களும் பெரும் சோகத்தில் தான் இருந்து வருகின்றனர் .

பிறந்த நாள் வீடியோக்கள்

பிறந்த நாள் வீடியோக்கள்

இந்த நிலையில் இதுவரைக்கும் அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து முடித்து இருந்த காட்சிகளை ஒளிபரப்பி வந்தனர் .இன்று சீரியலில் அவரது பிறந்தநாள் காட்சி ஒளிபரப்பப்படுகிறது என்று இன்றைய எபிசோடுக்காண வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

தாக்கம்

தாக்கம்

ஒருவர் நம் கூட இருக்கும் போது பேசும் வார்த்தைகளும் செய்யும் செயல்களும் அந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது .ஆனால் அவர்கள் கூட இல்லாத நிலையில் அவர்கள் பேசிய பேச்சும் செயலும் தான் ஒவ்வொரு கணமும் வழித்துக் கொண்டு இருக்கும். அந்த மாதிரிதான் இவர் பிறந்த நாள் ஷூட்டிங்கில் சந்தோஷமாக கடவுளே எனக்கு மொத்த சந்தோஷத்தையும் ஒரேடியாக கொடுத்து விட்டீர்களே என்று கடவுளிடம் கையெடுத்து கும்பிட்டார் .

சோகத்தில் ரசிகர்கள்

சோகத்தில் ரசிகர்கள்

இதை பார்த்து அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகிறார்கள். கொஞ்சமாவது உங்களுக்கு சந்தோஷத்தை அந்த கடவுள் கொடுத்து இருந்தார் என்றால் நீங்கள் இப்படி எங்களை விட்டுப் போயிருக்க மாட்டீங்களே என்று தங்களுடைய கவலை தெரிவித்து வருகிறார்கள். இதுவரைக்கும் அந்த சீரியலில் கதிர்முல்லை ஜோடி எப்போது சேர்வார்கள் என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்போதுதான் இந்த ஜோடி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்திருந்தனர்.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

இவர்களின் மனமாற்றத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னேறி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த துரதிர்ஷ்டமான இழப்பு ஏற்பட்டு் அவருடைய ரசிகர்களும் சினிமா துறையினரும் பெரும் அதிர்ச்சியில் இருக்கும் போது இன்றைய எபிசோட் வீடியோக்களை பார்த்து பலருக்கும் கண்ணீர்தான் வந்து கொண்டிருக்கிறதாம்.

முல்லைக்குப் பிறந்த நாள்

முல்லைக்குப் பிறந்த நாள்

சித்ராவின் பிறந்தநாளுக்காக, முல்லையின் பிறந்தநாளுக்காக, கதிர், எனக்காக பிறந்தவளே வாழ்த்துக்கள் கதிர் என்று அவருடைய கடையில் இருக்கும் கடுகு, உளுந்தம் பருப்பு ,துவரம் பருப்பு எல்லாம் வைத்து எழுதி வைத்திருப்பார் .இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முல்லை சந்தோசமாக என்னுடைய பிறந்தநாளை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டிருக்கும் வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

தவிப்பில் ரசிகர்கள்

தவிப்பில் ரசிகர்கள்

உண்மையிலேயே சித்ராவின் பிறந்தநாளை இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அனைவரும் அவருடைய போட்டோவை டிபி ஆக வைத்து செம என்ஜாய் பண்ணினார்கள். அதுமட்டுமல்லாமல் சித்ராவிற்கு பல்வேறு பரிசுப் பொருள்களையும் தங்களால் முடிந்த அளவுக்கு செய்து வாங்கியும் கொடுத்து அனுப்பி இருந்தனர். ஆனால் சீரியலின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு இப்படி எல்லாரையும் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டாரே என்று தான் பலருடைய தவிப்பாக தற்போது இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+