"சித்ரா சித்ரா"... நினைக்க நினைக்க வயிறு எரியுதே.. குமுறி அழும் ரசிகர்கள்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த சித்து தற்போது இறந்துவிட்டார் என்னும் செய்தியை நம்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
அவருடைய இறப்பிற்கான காரணமும் இறப்பின் பின்னணியும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவருடைய ரசிகர்கள் அவருடைய பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
இந்த வீடியோக்களை பார்க்கப் பார்க்க துக்கம் அதிகமாகி அவருடைய நினைவுகள் நீங்காமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எப்படி இருப்பார்
எப்போதுமே செம ஜாலியாக வால்தனம் பண்ணிக்கொண்டு இருந்தவரை பார்த்தவர்களுக்கு அவர் தற்போது இல்லை என்றாலும் அவர் பேசிய வார்த்தைகள் இன்னமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது .அவர் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் பல்வேறு அவமானங்களையும் கஷ்டங்களையும் தாண்டி இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் .

சாமான்ய பின்னணி
அது அனைவருக்கும் தெரிந்ததுதான். சினிமா பின்னணி இல்லாமல் இந்த பீல்டுக்குள் நுழைந்து யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் அனைத்து பிரச்சனைகளையும் தனி பெண்ணாகவே எதிர்த்து நின்று பல்வேறு அவமானங்களுக்கும் தளர்ந்து போகாமல் ஜொலித்துக் கொண்டிருந்தவர்தான். அவர் எப்போதுமே சந்தோசமான முகத்தை மட்டும் தான் அவருடைய ரசிகர்களுக்கும் உறவினர்களுக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சோகத்தை மறைத்துக் கொண்டு
அவருடைய சோகத்தை யாரிடமும் ஷேர் பண்ணாமல் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு இருந்திருக்கிறார் .அவர் ஒரு பேட்டியில் கூட தனது கடந்த காலங்களைப் பற்றியும் தன்னுடைய ஆசையை பற்றியும் பேசி இருக்கிறார். அவர் பேசிய பேச்சு தான் தற்போது அனைவரின் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வீடியோக்கள் வைரல்
தற்போது அவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோக்களும் அவர் பேட்டி கொடுத்த வீடியோக்களும் வைரலாகப் பரவி வரும் நிலையில் அவருடைய உண்மையான நிலையை பற்றி அவர் பேசி இருப்பது தான் பல ரசிகர்களின் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் ஆகவும் இருந்து வருகிறது .அந்த வீடியோவில் அவர் எனக்குன்னு நெருங்கிய பிரண்ட்ஸ் யாருமே இல்லை என்னுடைய சோகங்களை நான் யாரிடமும் பகிர்ந்து கொண்டதே இல்லை.

சோகம் எனக்குள்
என்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன் சோகத்தை எனக்குள்ளேயே வைத்துவிடுவேன் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் கூட எனது நெருங்கிய தோழியான எனது காருக்குள் மட்டும் தான் பேசுவேன் என்னுடைய கார் இடம் மட்டும்தான் எல்லாத்தையுமே சொல்லி இருக்கிறேன் .

உள்ளுக்குள்ளேயே அழுகை
காருக்குள் இருந்து தான் எனது கஷ்டங்களை சொல்லி அழவும் செய்திருக்கிறேன். நான் வெளியில் அழுது யாரும் பார்க்கவும் முடியாது. சீரியலை தாண்டி நான் எதிலும் அழவே மாட்டேன் என்று தன்னம்பிக்கையோடு கூறியிருந்தார். அதிலும் அவருக்கு எப்போதுமே அவருடைய அம்மா அப்பா மீது அதிகப்படியான பாசம் இருந்து இருக்கிறது. அதனால்தான் தானாக உழைத்து வாங்கி ஒரு வீட்டைக் கட்டி அவர்களை அதில் சந்தோஷமாக குடியமர்த்தி இருக்கிறார்.

பிரச்சினைகளை சமாளிப்பவர்
ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து இவ்வளவு கஷ்டப்பட்டு தனது தந்தை தாய் சந்தோசமாக வாழ்வதற்காக அவர்களை சந்தோஷ படுத்தி பார்க்க வேண்டும் என்று எவ்வளவு அவமானங்களையும் அவர்களிடம் கூட சொல்லாமல் தான் இவர் வாழ்ந்து வந்திருக்கிறார். ஏதாவது சூட்டிங் ஸ்பாட்டில் சின்ன பிரச்சனை என்றால் கூட அவங்க அம்மாவிடம் சொல்ல மாட்டாராம்.

சாதிக்கணும்மா
அப்படியே அவரே தெரிந்து இது எல்லாம் வேண்டாம் வந்துவிடு என்று கூறினாலும் இவர் விடவே மாட்டாராம் விடாமல் அதில் நான் ஜெயித்துக் காட்ட வேண்டும் முன்னேறி வர வேண்டும் என்பது மட்டும்தான் இவரது தாரக மந்திரமாக இருக்கிறது. தாய் தந்தையின் காரணமாகத்தான் அவர்கள் இருவரையும் அடிக்கடி பெரிய அளவில் சுற்றுலா கூட்டி சென்று அவர்களை சந்தோசப்படுத்தி அந்த போட்டோஸ்களை கூட சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்திருந்தார்.

அம்மா அப்பா சந்தோஷம்
பலரும் வேலை செய்து தன் கையில் பணம் வந்த பிறகு பெற்றவர்களை கண்டுக்காமல் விட்டுவிட்டு தனது சந்தோஷத்தை மட்டுமே தேடி சென்று கொண்டிருக்கும் போது இவர் அவரது பெற்றோர்களின் சந்தோஷத்தையும் எனக்கு முக்கியம் என்று அவர்களை சந்தோஷப்படுத்தி பார்த்து சந்தோஷப்பட்டார்.

வெல்ல வேண்டும்
அதுமட்டுமில்லாமல் அவர்களுக்காகவே என்னுடைய வெற்றியை அடைய வேண்டும் எனது வாழ்க்கையில் பெரிய லட்சியமே பெரிய ஆளாக வர வேண்டும் அனைவருக்கும் முன்னாடி எனக்குன்னு ஒரு தனி இடம் வேண்டும் என்பதுதான் என்று கூறி இருக்கிறார் .அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்களும் உறவினர்களும் கவலையை அடக்கமுடியாமல் கண்ணீரோடு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications