என்னை அப்படி தாங்குனீங்களே... சித்ரா அக்கா.. முடியலையே... கதறி அழும் ஹேமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்க அக்கா தங்கச்சியாக நடிக்கவில்லை. உண்மையிலேயே அப்படித்தான் வாழ்ந்துகிட்டு இருந்தோம் .இப்போ என்னால முடியல என்று கூறி கதறி அழுதுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.

விஜய் டிவியில் தற்போது பிரபலங்கள் பலரும் கதறிக் கொண்டு இருப்பது முல்லை சித்திராவின் இழப்புதான் . இந்த சேனலின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் . தற்போது இல்லை என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

ரசிகர்களும் அந்த வேதனையில் இருக்கும்போது சித்ரா உடன் ஒன்றாக நடித்த ஹேமா வெளியிட்ட வீடியோக்களை பார்த்து பல ரசிகர்களும் பீல் பண்ணி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜாலியாக கடைசியாக வெளியில் சென்ற வீடியோ அது.

ஜாலியான சித்ரா

ஜாலியான சித்ரா

சூட்டிங் ஸ்பாட்டில் எப்பவுமே ஜாலியாக இருந்த சித்ரா அவர் மட்டும் ஜாலியாக இல்லாமல் அங்கு இருப்பவர்களையும் பாடாய்படுத்தி கலாய்த்து ஜாலியாகவே வைத்திருப்பார். அதுமட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பகதை போய்க் கொண்டிருந்தாலும் அங்கு நடிப்பவர்களும் ஒரு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வாழ்ந்தோமே

வாழ்ந்தோமே

இவர்கள் இரண்டு வருடமாக ஒன்றாக நடிப்பதால் இவர்களுக்குள் உறவினர்களை போலவே ஒரு நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் வீடியோக்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பரப்பி வருவார்கள் .அந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமாவும் முல்லை கேரக்டரில் நடித்த சித்ராவும் அக்கா தங்கச்சி ஆக சீரியலில் நடித்து இருந்தாலும் உண்மையிலும் அவர்கள் அந்த மாதிரி தான் இருந்திருக்கிறார்கள்.

மீனா மீது பாசம்

மீனா மீது பாசம்

அதனால்தான் சூட்டிங் ஸ்பாட்டில் ஹேமா மாசமாக இருக்கும் நேரத்திலும் கூட இவருக்கு பார்த்து பார்த்து சித்ரா பணிவிடை செய்வாராம். அதுவுமில்லாமல் ரொம்பவே இவரை மட்டும் பார்த்துக் கொள்வாராம். இவருக்கு குழந்தை பிறந்து இவர் மீண்டும் நடிக்க வந்தாலும் இவர் மேல் தனியாக பாசம் காட்டி தான் இருந்திருக்கிறார் சித்ரா.

ஹேமாவால் தாங்கிக்க முடியலை

ஹேமாவால் தாங்கிக்க முடியலை

அதனால்தான் அவர் சித்ராவின் இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று ஹேமா கூறியிருக்கிறார். சீரியல் தான் நான் எல்லாரையும் பாடாய் படுத்துவேன். ஆனால் நிஜத்தில் எல்லாரையும் பாடாய்படுத்துகிறது சித்ரா தான். அந்த அளவிற்கு வாலுத்தனம் பண்ணிகிட்டு அனைவரையும் கலாய்ச்சுகிட்டு இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

அப்படி செய்வார்

அப்படி செய்வார்

அதுமட்டுமில்ல தான் செய்யும் சேட்டைகளையும் வீடியோ எடுக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணுவார் அப்படி இவர்கள் இருவரும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்றை தற்போது ஹேமா வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் சித்ரா தனது நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு ஹேமா உடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

அழுகிறார் ஹேமா

அழுகிறார் ஹேமா

தன்னுடைய அழகான நகங்களை காட்டி அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஹேமா சிரித்துக் கொண்டே அவரை கிண்டல் அடித்திருக்கிறார் . ஆனால் தற்போது நீ இல்லாமல் நான் மட்டும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும்போது மனது ரொம்ப வலிக்கிறது என்று உருக்கமாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

இதயமே நொறுங்கிடுச்சு

இதயமே நொறுங்கிடுச்சு

ஹேமா சித்துவை பற்றி போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் சித்ராவின் ரசிகர்கள் கமெண்ட்களாக கொட்டி இருக்கிறார்கள் . அதிலும் அவர்களும் சித்ராவின் பிரிவை மூன்று நாட்கள் ஆனாலும் எங்களால் மறக்க முடியவில்லை மறக்க நினைக்கவும் முடியாது என்று ஹார்ட் பிரைக் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். யாராலுமே சித்ராவை மறக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+