Chocolate Serial: தமிழ்நாட்டில் யாருக்குமே அடையாளம் தெரியலை... சாக்லேட் நாயகி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் சாக்லேட் சீரியலில் இனியாவாக நடிக்கும் பிரியங்கா அந்த சீரியலின் கதாநாயகி. சாக்லேட் என்கிற டைட்டிலுக்கு ஏற்ப பிரியங்காவை கருப்பு பெண்ணாக்கி இனியாவாக நடிக்க வச்சு இருக்கிறது சீரியல் குழு.

Recommended Video

    Chocolate Serial Iniya | Sun Tv | Priyanka | Rahul ravi

    சாக்லேட் சீரியல் மூலம் பிரபலம் ஆகி இருக்கீங்க. மக்கள் உங்களை எப்படி வரவேற்று இருக்காங்க என்று கேட்டால், அவங்களுக்கு என்னை பார்த்தால் அடையாளமே தெரியலை...ப்ச்..என்று வருத்தப்படுகிறார் பிரியங்கா.

    சீரியல் முழுக்க இனியாவை கருப்பு நிறத்தில்தான் பார்க்க முடிகிறது. பின் எப்படி அவரை அடையாளம் காணுவதாம்...பிரியங்கா நேரில் கோதுமை நிறத்தில் இருக்கிறார்.

    பெங்களூர் பொண்ணு பிரியங்கா

    பெங்களூர் பொண்ணு பிரியங்கா

    சாக்லேட் சீரியலில் இனியாவாக நடித்து வரும் பிரியங்கா, பெங்களூரில் பிறந்த பொண்ணு. சாக்லேட் சீரியலில் பார்ப்பது போல கருப்பு நிறம் இல்லை. அதற்கு மாறான நிறத்தில் இருக்கிறார். நல்ல உயரம் ஸ்லிம் உடல்வாகு என்று மாடலிங்குக்கு ஏற்ற உருவம். பெங்களூருவில் மாடலிங் செய்தும் வருகிறார் பிரியங்கா.

     உதயா டிவியில் பிரியங்கா

    உதயா டிவியில் பிரியங்கா

    இப்போது பிரியங்கா நடித்து வரும் சாக்லேட் சீரியல் முதன்முதலாக உதயா டிவியில் அதே பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியல். அதன் மொழியாக்கம்தான் தமிழிழும் சாக்லேட் என்கிற பெயரிலேயே ஒளிபரப்பாகி வருது. முதலில் மாடலிங் அடுத்து கன்னட சீரியல்களில் நடித்து, பின்னர் தமிழுக்கு வந்து இருக்கார் பிரியங்கா. ஆனால், பிரியங்காவுக்கு இன்னும் தமிழ் சரியாக பேச வரவில்லை.

    பெங்களூருவில் அடையாளம்

    பெங்களூருவில் அடையாளம்

    பெங்களூருவில் கூட நான்தான் சாக்லேட் சீரியலில் நடிக்கிறேன் என்பதை முதலில் பார்ப்பவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். அடுத்து கலர்ஸ் டிவி சீரியலில் நடிக்கும்போது கொஞ்சம் அடையாளம் தெரிந்து மக்கள் என்னிடம் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், சென்னையில் வந்து நான் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது. அது என் நடிப்புக்கு கிடைச்ச அங்கீகாரமா நினைச்சாலும்,கேரக்ட்ரா நான் எப்படி நடிச்சு இருக்கேன்னு மக்கள் வாயால் நேரில் கேட்க முடியவில்லை என்பது வருத்தமாத்தான் இருக்கு.

    பசங்க சைட் அடிப்பாங்க

    பசங்க சைட் அடிப்பாங்க

    பெங்களூருவாக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி.. யாருக்கும் சட்டுன்னு என்னை அடையாளம் தெரியாது. அது எனக்கு ரொம்ப கவலைதான் என்றாலும். அழகான பெண்களை சைட் அடிக்கற மாதிரி என்னையும் கேஷுவலா பசங்க சைட் அடிப்பாங்க. சில பசங்க நான் போகும் இடம் எல்லாம் வந்து நின்னு லுக்கு விட்டு நிப்பாங்க. நானும் தைரியமா லுக்கு விடுவேன்.. இதெல்லாம் ஜாலியாத்தான் இருக்கு.. ஆனா, தைரியமா செல்ஃபி எடுக்க யாரும் வருவதில்லை.. அதாவது நான் சாக்லேட் சீரியல் நாயகி என்று தெரிந்து ஒரு நடிகையுடன் செல்ஃபி எடுக்க வருவது போல என்று சொல்கிறார் பிரியங்கா.

    சாக்லேட் சீரியலில் நடிப்பதால், சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் கூட பிரியங்கா கருப்பு நிற மேக்கப்பில்தான் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+