Chocolate Serial: புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிச்சாம்!
சென்னை: புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிச்சாம்னு சொல்ற கதையா இருக்குது சன் டிவியின் சாக்லேட் சீரியல் கதை.
குறைபாடுகளை சுட்டிக் காண்பித்து சீரியல்கள் எடுப்பதை விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி உள்ளிட்ட சானல்கள் முக்கிய அம்சமாக கொண்டு சீரியல்கள் எடுத்து வருகின்றன.
அந்த வரிசையில் சன் டிவி இப்போது சாக்லேட் சீரியலை எடுத்து ஒளிபரப்பத் துவங்கி உள்ளது.

தனி வியூவர்ஸ்
சன் டிவிக்கு என்று தனி வியூவர்ஸ் உண்டு. எதையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அடிதடி, குத்து வெட்டு என்று எதைத் தந்தாலும், புதுப்புது வெரைட்டியில் வரிசையாக பல்வேறு ரகத்தில் வரும் சீரியல்களை அவர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

இதைத்தான் என்று
இதைத்தான் என்று எதையும் சன் டிவி சீரியல் ரசிகர்கள் மீது திணிப்பதில்லை. ஸ்லாட் வாங்குபவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப கதைகள், சீரியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அதற்கேற்ப அவர்கள் சீரியலின் கதையை கொண்டு போவார்கள்.

ரேட்டிங் மட்டும்தான்
ரேட்டிங் ஃபிக்சிங் மட்டும்தான் சன் டிவியின் கையில் இருக்கும். ரேட்டிங் வரவில்லை என்றால் அவர்களை துரிதப்படுத்துவதும். அவர்களின் ஸ்லாட் டைமை மாற்றி கொடுப்பது என்பதும் மட்டும்தான் சன் டிவியின் கையில், சன் டிவியின் முடிவாக இருக்கும். இதை தக்க வைத்துக் கொள்ள ஸ்லாட் எடுப்பவர்கள் பாடுபட்டு கதையை கொண்டு போவார்கள்.

கதையில் வெரைட்டி
எனவேதான் கதையில் வெரைட்டி கிடைக்கும். இதில் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது என்பகிற பப்பு இங்கு வேகாது. ஆனால் இப்போது இந்த வலையில் எப்படி சன் டிவி விழுந்ததோ தெரியவில்லை. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் போல கருப்பு நிற பெண்ணை வைத்து சாக்லேட் கதையை கொண்டு போய் இருக்கிறார்கள்.

சாக்லேட் கருப்பு
பேக்கரி வைத்து இருக்கும் பெண்ணை கருப்பு பெண்ணாக காண்பித்து, சாக்லேட் கருப்பு, சாக்லேட்டில் இனிப்பு செய்யும் இனியா கருப்பு என்கிற மாதிரி கதை அமைத்து இருக்கிறார்கள். கருப்பா இருக்கும் இந்த பெண்ணை கட்டிக்கறதுக்கு சீர் வரிசையா இந்த பேக்கரியை எழுதி கொடுத்துருங்க என்று மாப்பிள்ளை விட்டார் சீர் கேட்பது போல ஆரம்பத்தில் கதை அமைச்சு இருக்காங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications