Chithi Serial: 2வது சித்திக்கு டைம் சரியில்லை.. முதல் சித்தி ரிட்டர்ன் ஆகறாங்க!
சென்னை: சன் டிவியில் வருகிற திங்கள் முதல் தினமும் இரவு 9 மணிக்கு சித்தி வர போறாங்க...அதாங்க முதல் சீசன் சித்தி. இது இன்னொரு சித்தியின் கதை இல்லை...சட்சாத் சித்தியின் கதைதான்.
1999ம் வருடம் ராதிகா சரத்குமார் மெகா சீரியலாக தயாரித்து நடித்து சக்கை போடு போட்ட சித்தி முதல் சீசனை, மறுபடியும் முதலில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பத் திட்டமிட்டு, அதன் படி வருகிற திங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும், இப்போது லாக்டவுன் காரணமாக சித்தி 2 ஷூட்டிங் இல்லை.

சித்த்தீ...ராதிகா
ராதிகா சரத்குமார், சித்தி சீரியல் மூலமாகத்தான் சன் டிவியின் நிரந்தர தயாரிப்பாளராக ஒரு இடம் பிடித்தார். சித்திக்கு பிறகு அண்ணாமலை, செல்வி, செல்லமே, வாணி ராணி என்று சீரியல்களை வழங்கிக்கொண்டு வந்தவர் சந்திரகுமாரி சீரியல் மூலம் பெரும் சரிவை சந்தித்தார்.

10 மாத இடைவெளி
சந்திரகுமாரி சீரியலுக்குப் பிறகு கிட்டத்தட்ட 10 மாத இடைவெளிக்குப் பின்னர் சித்தி 2 சீரியலில் சன் டிவிக்கு மீண்டும் வந்தார். ஆனால், சித்தி 2 சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பை எட்டவில்லை என்று சொல்வதை விட..பெருமளவு ஏமாற்றத்தை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

லாக்டவுன் நேரம்
இத்துடன் லாக்டவுன் நேரமும் சேர்த்துக்கொள்ள. சித்தி 2 ஒளிபரப்ப இயலாமல் போனது. நேற்று வெள்ளி வரை இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று சித்தி 2 சீரியலை ஒளிபரப்பி வந்த சன் டிவி வரும் திங்கள் முதல் அதே நேரத்தை ராடான் சீரியலான சித்திக்கு ஒதுக்கித் தந்து இருக்கிறது.

புது சீரியல்கள்
தொலைக்காட்சிகளில் இனி புது சீரியல்கள் ஷூட்டிங் ஆரம்பித்து செட் ஆவதற்கு குறைந்தது 3 மாத கால அவகாசம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். இதை எல்லாம் கணக்கில் கொண்ட சன் டிவி பழைய சீரியல்களை மறு முறை ஒளிபரப்பத் துவங்கி இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications