சினிமா இருக்கட்டுமுங்க.. வெப் சீரிஸ் பக்கம் ஒரு ரவுண்டு அடிக்கலாமா.. விஐபிகளின் ஆசை!
Recommended Video
சென்னை: சினிமா நடிகர் நடிகைகள் சினிமாவுக்குப் பிறகு விளம்பர படங்களுக்கு வந்தனர். இப்போது அந்த வரிசையில் வெப் சீரிஸும் இடம்பிடித்து இருப்பது சற்றே ஆச்சரியத்தை அளிக்கிறது.
நமக்கு ஆச்சரியத்தை அளிப்பது ஒரு புறம் இருந்தாலும், ஏன் இப்படி என்று ஆராய்ச்சி செய்யும்போது எல்லாம் அவர்கள் நலனுக்காக வருவாய்க்காகதான் என்பதும் புரிகிறது.
சினிமா, விளம்பரப் படங்கள் போன்று வெப்சீரிஸில் நடிப்பது என்பது இவர்களுக்கு கவுரவமான ஒரு விஷயமாவும் இருக்கிறது. அதோடு இன்னும் என்னென்ன பிளஸ் என்று பார்ப்போம்.

இணைய தள நிறுவனங்கள்
வெப் சீரிஸைத் தயாரிப்பது யார் என்று பார்த்தால் அமேசான் அமேசான் ப்ரைம், ஹாட் ட் ஸ்டார் பிரிமியம், நெட் ஃபிலிக்ஸ், யூட்யூப் ஒரிஜினல் போன்ற பல நிறுவனங்கள். இவைகளை இன்றைய இளசுகள் சப்ஸ்க்ரைப் செய்து வைத்திருப்பார்கள். அதாவது புதிதாக ரிலீசான படங்களை. ரிலீசான 15 நாட்கள் கழித்து இது போன்ற இணைய தளங்களில் புதுப் படங்களை கண்டு களிக்க முடியும்.

பார்க்கும் இளைஞர்கள்
இப்படி இணைய தளங்களில் சப்ஸ்கிரைப் செய்து படம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இளைய தலைமுறையினர்தான் . இவர்களை கணக்குப் போட்டு அதே இணைய தள நிறுவனங்கள் வெப் சீரிஸ் என்று பெயர் வைத்து பிரபல நடிகர் நடிகைகளின் கால்ஷீட் வாங்கி வெப் சீரிஸ் இயக்கித் தருபவர்களுக்கு தயாரிப்பு செலவை ஏற்கின்றது.

குறுகிய காலத்தில்
வெப் சீரிஸ் குறைந்த பட்சம் 30 நாட்கள், அதிகப் பட்சம் 50 நாட்களில் முடிந்துவிடும்.நடிகர் நடிகைகளுக்கு இது ஒரு பிளஸ். அடுத்து இளசுகள் மத்தியில் இப்படி நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் என்பதையும் நினைவூட்டும் முயற்சி, உடனடி எதிர்பாராத பேமெண்ட்...இது எல்லாம்தான் வெப்சீரீஸுக்கு இவர்கள் முன்னுரிமை கொடுப்பதற்கான காரணம்.

அதிக விலை
இது போன்ற இணைய தளங்களை சப்ஸ்க்ரைப் செய்ய மாதம் 300 ரூபாய் வரை கூட ஆகும். அதற்கு மேலும் ஆகும். இதை எல்லாம் பார்ப்பவர்கள் இளசுகள் என்பதே இவர்களின் டார்கெட். வீட்டில் உட்கார்ந்து சீரியல் பார்த்து அழுபவர்கள் அல்ல. டிவி சீரியல் என்பது இவர்களுக்கு கொஞ்சம் மட்டமானது என்கிற எண்ணமும் உள்ளது. இதில் நடித்துவிட்டால் சீரியல் நடிகை நடிகர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்கிற பயமும் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications