எங்கு பார்த்தாலும் சினிமா பெயர்.. டிவி சீரியல்களுக்கு வந்த சோகத்தைப் பாருங்க!
சென்னை: தமிழ் சீரியல்களுக்கு திரைப்படங்களின் பெயரை வைக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது.
ஒரு காலத்தில் வயதானவர்களும் இல்லத்தரசிகளும் மட்டுமே பார்த்த சின்னத்திரை இன்று இளைஞர்களையும் தன்வசம் இழுத்துள்ளது. சீரியல் என்றாலே சன் டிவி என்ற நிலை மாறி, ஸ்டார் விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சீரியல்களும் டிஆர்பி ரேஸில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு வருகின்றன.

சினிமாவிலேயே லிவிங் டு கெதர் முறையை எடுக்க யோசித்த காலத்திலேயே, அதையே மூலக் கதையாக கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியல் மாபெரும் வெற்றி பெற்றது. அன்றிலிருந்து, வெற்றி பெற்ற படங்களின் பெயரை சுட்டும் வழக்கம் இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்த ட்ரெண்ட் அதிகமாகியுள்ளது. விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் 90% சதவீதம் சீரியல்களின் பெயர் திரைப்படங்களின் பெயரே. நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி, சின்னத்தம்பி,மவுன ராகம், சிவா மனசுல சக்தி, பாரதி கண்ணம்மா, அரண்மனை கிளி, கடைக்குட்டி சிங்கம் என எல்லாமே சினிமாவின் பெயர்கள் தான்
ஜீ தமிழிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். செம்பருத்தி, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், தேவதையை கண்டேன், மெல்ல திறந்தது கதவு, பூவே பூச்சூடவா, சத்யா என திரைப்பட பெயரை கொண்ட சீரியல்கள் ஏராளம்.
சன் டிவியை எடுத்துக் கொண்டால் ரோஜா, வள்ளி, மாயா, மின்னலே, பாமா ருக்மணி எனவும், ஜெயா டிவியிலும் கோபுரங்கள் சாய்வதில்லை, சுப்ரமணியபுரம் என திரைப்பட பெயர் கொண்ட சீரியல்கள் உள்ளன.
திரைப்படங்களுக்கு நிகராக பிரம்மாண்டம் காட்டத் தொடங்கியுள்ள சின்னத்திரை, டைட்டிலில் வித்தியாசம் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications