Roja Serial: சீரியல்களில் பாடல்...ரொமான்ஸ் ரொம்ப முக்கியம்!
சென்னை: ஆமா..அது இப்போ ரொம்ப முக்கியம்...என்று தேவையில்லாத விஷயங்களுக்கு நக்கலாக பேசுவோம். ஆனால், தொலைக்காட்சி சீரியல்களை பொறுத்த மட்டில் இன்றைய காலக்கட்டத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அடிக்கடி இருக்கணும்.
பிரபலமான சினிமா பாடல்களுக்கு சீரியல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்யவேண்டும் என்பது கை எழுத்து இடப்படாத அக்ரிமெண்ட்.
இப்படி சீரியல்களில் ஒளிபரப்பான பாடல்களில் உனக்காக வாழ நினைக்கிறேன்...உசுரோட வாசம் புடிக்கிறேன் என்கிற பாடல் சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு.. இந்த பாடலுக்கு ரொமான்ஸ் செய்த சீரியல் நடிகர் நடிகைகள் ஏராளம் என்கிற அளவுக்கு புது ரெகார்ட் பிரேக் உருவாகி வருது.

ரோஜா அர்ஜுன் ரொமான்ஸ்
சன் டிவியின் ரோஜா சீரியலில் அர்ஜுன், ரோஜா ரொமான்ஸ் காட்சிகள் சினிமாவில் ஒரு நாயகன் நாயகி செய்வது போல விரசம் இல்லாமல், டைட் குளோசப் காட்சிகள் என்று வைக்காமல் சும்மா பார்க்கலாம் என்பது போல மேலோட்டமாகத்தான் இருக்கும். அதாவது பாடல் காட்சிகளில் கையைப் பிடிப்பது, ஓடுவது என்று சினிமாவில் ரொமான்ஸ் பார்ப்பது போல இருக்கும்.

அணு ஃபிளாட்
ஹைதராபாத் அரண்மனைக்கு அணுவை மட்டும் இல்லாமல் குடும்பத்தையே கூட்டிகிட்டு போயிட்டாங்க.. அனுவின் அம்மா அப்பாவா நடிக்க வந்தவங்க. அணு, முதலில் பேலஸை பார்த்து அசந்து போனாள்.. அங்கு இருக்கும் அலங்கார மர பொம்மைகளை பார்த்து அசந்து போனாள். கடைசியில் அவள் மெல்ட் ஆகும்படி மரகத கிரீடம்னு சொன்னாங்க பாருங்க.. அந்த இடத்தில் அணு ஃ பிளாட்.

ரோஜா இளவரசி
அனுவுக்கு ராஜ பரம்பரை நகைகள் போட்டுவிட்டு, அவளை இளவரசி மாதிரி அலங்கரித்து அழைத்து வர.. இங்கே அர்ஜுனும், ரோஜாவு அதே அரச காலத்துக்கு போயிட்டாங்க. ரோஜா அணு மாதிரி நகைகள் போட்டுக்கொண்டு, இளவரசி மாதிரி சேலைக் கட்டிக்கொண்டு வர மன்னன் அர்ஜூனுடன் ஒரு பாட்டு பாடி இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள்.

பூவா இல்லை புஷ்பமா
சொன்னா நம்ப மாட்டீங்க...பூவா இல்லை புஷ்பமா என்கிற முழு பாடலுக்கும் அர்ஜுன், ரோஜா ஃபுல் ரொமான்ஸுங்க... சீரியல் எடுக்கறவங்க இப்போதெல்லாம் முழு பாடலையும் பயன்படுத்திக்கறோம்னு சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி வாங்கிகிட்டு ஷூட் செய்கிறார்கள் போலும்... முழுப் பாடலுக்கும் டான்ஸ் ரொமான்ஸ் செய்துவிட்டு, கடைசியில் ரோஜாவை பாகுபலி லிங்கத்தை தூக்கி தோளில் வைத்து நடந்தது போல அர்ஜுன் ரோஜாவைத் தூக்கிக்கிட்டு நடக்கறான்.

கதை காட்சிகள்
இன்றைய சீரியல்களில் கதை அடுத்து இது போன்ற பாடல் காட்சிகள் என்று இருக்கும்போது எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாமல் மக்கள் ஜாலியா சீரியல் பார்க்கலாம். எப்போதும் மக்களை ஒருவித டென்க்ஷனிலேயே சீரியல் பார்க்க வைக்கும் மனப்பான்மையை இனிமேலும் தவிர்த்து ரோஜா பாணியை பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications