Eeramana Rojave Serial: கண்ணை மூடி...கணவனுக்கு சட்டை அளவு.. ஆஹா சூப்பர் சீன்!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் இந்த மாத சம்பள நாள். மலர் சம்பளத்துடன் வருவாளா, இல்லை பிறந்த வீட்டில் கொடுத்துவிட்டு வருவாளான்னு வீட்டில் பெண்கள் சண்டை போட காத்து இருக்கிறார்கள்.
சம்பளம் வாங்கிய மலர் கணவன் வெற்றிக்கு ஆசையாக ஒரு சட்டை, வேஷ்டி வாங்கித் தர நினைக்கிறாள். தன்னுடன் வேலை பார்க்கும் இன்னொரு டீச்சரை அழைச்சுக்கிட்டு ஜவுளிக் கடைக்கு போறா.
அங்கே சட்டை அளவு என்ன மேடம்னு கடைக்காரர் கேட்க, தெரியலையேன்னு சொல்றா மலர். தெரியலேன்னா எப்படி மேடம் அளவு தெரிஞ்சால்தானே நாங்க சட்டையை எடுத்து காட்ட முடியும்னு சொல்றார்.

அளவு என்ன
சரிங்க.. உங்க சட்டை அளவு என்னன்னு கேட்கறா. அவன் முப்பத்தெட்டுன்னு சொல்ல, சரி, உங்க அளவுலேர்ந்து ஆரம்பிக்கலாம். முதலில் உங்க அளவு சட்டை ஒண்ணு எடுங்கன்னு கேட்கறா. அவன் எடுத்து போட, அதை வெற்றி போட்டுக் கொண்டு வருவது போல கண்களை மூடி கற்பனை செய்கிறாள். கற்பனையில் பொத்தான் போடாமல் அவன் வர, என்னங்க பட்டன் போடாம வந்து நிக்கறீங்கன்னு கேட்க, நான் என்னங்க செய்யறது..பட்டன் போட முடியலைங்கன்னு அவன் சொல்றான்.

அடுத்த அளவு
சரி.. இது வேணாம்ங்க. இதுக்கு அடுத்த அளவு என்னவோ அதை எடுங்கன்னு சொல்ல, கடைக்காரனும் எடுத்துக் கொடுக்க, கண்களை மூடி கற்பனையில் வெற்றி அந்த சட்டையை போட்டு வருவது போல பார்க்க, இப்போது சட்டை கொஞ்சம் பிடிப்பாக இருக்கிறது. இங்கே பிடிக்குது, அங்கே பிடிக்குதுன்னு சொல்றான். உடனே மலர் வேணாம்னு சொல்லிடறா.

அடுத்த சைஸ்
இதுக்கு அடுத்த சைஸ் எடுங்கன்னு சொல்ல,அதை எடுத்துக்கிட்டு மறுபடியும் கண்களை மூடி, வெற்றி போட்டு வருவது போல நினைக்க, அளவு சரியா இருக்குது. உடனே இது சரியா இருக்கும்.இதில் வேற கலர் காமிங்கன்னு கேட்கறா. எப்படி டீச்சர் கண்ணை மூடிக்கிட்டு அளவு சொல்றீங்கன்னு கேட்க, என் புருஷன் நான் எடுக்கும் அளவு சட்டையை போட்டுக்கிட்டு வந்து காமிக்கற மாதிரி கற்பனை செய்தேன்னு சொல்லி அசர வைக்கிறாள் மலர்.

ஆசை காதல்
கணவன் மேல் ஆசை காதல் இருந்தால், எதுவும் சாத்தியம் என்பது போல, கணவன் இந்த சட்டையை போட்டு வந்து தன் முன்னால் நின்று காண்பிப்பது போல கற்பனையில் நினைத்து ஒரு மனைவி அவனுக்கு சட்டை எடுக்கிறாள் என்பது ஒரு புதுவித கற்பனை. இதை அனுபவிக்கும் அந்த கணவனுக்கு எத்தனை சந்தோஷத்தை கொடுக்கிறாள் முதல் மாத சம்பளத்தில் இந்த மனைவி.
சூப்பர் சீன்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications