மாதம்பட்டி ரங்கராஜ் ஜாயை கண்டுக்கலியே.. என்னாது அப்பா ஸ்டாலினா? சிஎம், அரசுக்கு இதான் வேலை? பிரபலம்
சென்னை: ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும்.. அப்பா, என்னைப்போல் உதவியற்று நிற்கும் பெண்களுக்கு உங்களுடைய ஆட்சி நீதி வழங்க வேண்டும். நான் கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன் எனக்கு நீதி பெற்று கொடுங்கள், தவறு செய்தவன் எப்படி எந்த ஒரு தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம்? என முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கமிஷ்னர், சென்னை காவல் என மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் தெரிவித்து அனைவரையும் டேக் செய்துள்ளார் ஜாய் கிரிசில்டா
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "ஒன்னா பழகி சுற்ற வேண்டியது, அப்பறம் அவன் கெடுத்துட்டான், நாசம் செய்துட்டான் என்று பழியை போடுவது என்பது பல சம்பவங்களில் நடந்துள்ளது.. ஏற்கனவே திருமணமான மாதம்பட்டியுடன் ஏன் பழகி பிள்ளையை பெற்றுக் கொள்ள வேண்டும்? அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியாதா?

என்னதான் சேற்றை வாரி பூசினாலும், பெண்தான் அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்குமே தவிர, அந்த ஆண் ஒருபோதும் எங்கே நிற்க மாட்டான்..விஜயலட்சுமி இன்று எங்கே இருக்கிறார்? சீமான் எங்கே இருக்கிறார்?
உளவியல் நோயாளியாக மாறிப்போன கண்டிஷனில் விஜயலட்சுமி இன்று உள்ளார்.. அவருக்கு உதவி செய்த வீரலட்சுமி அட்வகேட் வீட்டில் உட்கார்ந்ததை, அவரே வீடியோவும் வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு மிகப்பெரிய உளவியல் சிக்கலுக்கு போய்விட்டார் விஜயலட்சுமி.
பில் கிளிண்டன், சின்மயி
இவ்வளவு திறமையை வைத்திருக்கும் சின்மயி, எதுக்காக 7 வருஷமா அந்த நபர் என்னை சீரழித்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்? இந்த 7 வருடத்தில் எத்தனையோ ஆயிரம் பாடல்களை சின்மயி பாடியிருக்கலாம்.. குறைந்தபட்சம் வருடத்துக்கு 10 பாடல் வைத்தாலும், 70 பாடல்களையாவது சின்மயி பாடியிருக்கலாம்.. ஒருபாட்டுக்கு 1 லட்சம் வாங்கியிருந்தாலும், 70 லட்சமாவது சம்பாதித்திருப்பார்..
இப்படி அன்று பலரும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சொன்னவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள்? பில் கிளிண்டன் மீது ஒருத்தர் புகார் தந்தார்.. அவர் பெயர்கூட யாருக்கும் தெரியாது.. காதல் வலையில் விழவைத்துவிட்டு மாதம்பட்டி ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் சொல்கிறார். இப்போது அவரையே மண்ணை வாரி தூற்றுகிறாரே ஜாய், இதன் பெயர்தான் காதலா?
டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு கோர்ட்டு போகலாம்
ஜாய் ஏற்கனவே திருமணமானவர்.. பொன்மகள் வந்தாள் பட டைரக்டருடன் திருமணமாகிவிட்டது. செல்வகுமாருடன் பழக்கம் இருந்தது? பெசன்ட் நகரில் சிக்னேச்சர் துணிக்கடையை வைத்து தந்தவர்கள் யார்? நிதின் பாலா யார்? இதற்கெல்லாம் பதில் சொல்லணும்தானே?
பல பெண்களுடன் பழகியவர் என்று மாதம்பட்டியை ஜாய் சொல்கிறார்.. அப்படியானால் அந்த பெண்களுடன் இவரும் ஒரு பெண்தானே?ஜாயை மாதம்பட்டி பலாத்காரம் செய்துவிட்டாரா? இதில் பாதிக்கப்பட்டவர் மாதம்பட்டிதான்.. அசிங்கப்படுத்தப்படுபவர் மாதம்பட்டிதான்.. டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க, எய்ம்ஸ்வரை தாராளமாக ஜாய் போகலாம்.
ஸ்டாலின் அப்பா நீதி வேண்டும்
ஸ்டாலின் அப்பா நீதி வேண்டும் என்கிறார் ஜாய்.. அரசுக்கும், போலீசுக்கும் இந்த கள்ள பஞ்சாயத்தை பேசுவதுதான் வேலையா? ஏற்கனவே ஒருத்தர் அங்கிள்ன்னு சொல்லிட்டு, சங்குல குத்து வாங்கிட்டு இருக்காரு? இப்ப இவங்களுக்கு நீதி வேண்டுமா? மாதம்பட்டிக்கு இல்லை, மொத்த ஆண்களுக்கும் நான் சப்போர்ட் தருகிறேன்..
கர்ப்பமானதே திட்டமிட்ட ஒன்றுதான்.. ஏனென்றால் 2வது மனைவிக்குதான் சட்டத்தில் இடமில்லை, ஆனால் 2வது மனைவியின் குழந்தைக்கு அனைத்து உரிமையும் உண்டு.. எனவே, திட்டமிட்ட ஒன்றுதான் இது. ஆனால், இதையெல்லாம் கடந்து போய்விடுவார் மாதம்பட்டி ரங்கராஜ்.. எல்லாருக்குமே கருப்பு பக்கம் இருக்கும்.. டிரம்பு மீதே புகார்கள் இருக்கு..
கண்டுகொள்ளாத ஸ்ருதி
மாதம்பட்டியின் மனைவி ஸ்ருதியே வழக்கறிஞர்தான்.. இவரே ஒரு புகார் தந்தால், ஜாயை ரிமாண்டு செய்துவிடலாம்.. ஸ்ருதி ஒரு புகார் தந்தால், ஜாய் மீது எப்ஐஆர் போடலாம்.. அதற்கு சட்டத்தில் வழியும் உண்டு.. ஆனால், ஜாயை ஒரு பொருட்டாகவே ஸ்ருதி எடுத்துக் கொள்ளவில்லை.. போலீசுக்கு இதுதான் வேலையா? பிரச்சனை என்றால் லோக்கல் போலீஸில் புகார் தர வேண்டும் என்று சொல்லிவிட்டு பத்திரிகைகளும் இதுபோன்ற நபர்களை கண்டுகொள்ள கூடாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications