OTT App: கலர்ஃபுல் மகராசி சீரியல்....மறு ஒளிபரப்பும் இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் சீரியல்களில் வித்தியாசப்பட்டு கொஞ்சம் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட சீரியல் மகராசி. ஆனால், சீரியல் கதையில் புதுமை அது இது என்று எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும் காட்சிகள் கலர்ஃபுல் என்று ரசிக்கும்படி இருக்கும்.

இந்த மகராசி சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லை என்பதால், இந்த சீரியலை சன் டிவி மறு ஒளிபரப்பு செய்து வந்தது.

கடந்த வாரத்தில் இருந்து மறு ஒளிபரப்பையும் நிறுத்தி இருக்கும் சன் டிவி, தனது யூடியூப் சானலில் மகராசி சீரியலில் பார்க்கும் வசதியை செய்துள்ளது.

 யூடியூப் சானல் சன் நெக்ஸ்ட்

யூடியூப் சானல் சன் நெக்ஸ்ட்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் படங்கள், நிகழ்ச்சிகள் இவைகளை சன் நெக்ஸ்ட் ஆப்பில் கண்டு மகிழலாம் என்கிற வசதியை செய்து உள்ளது. இது மட்டும் இல்லாமல் சன் டிவியின் யூடியூப் சானலில் இப்படியான வசதிகள் செய்து வைத்து சீரியல்களை கண்டுகளிக்க வாய்ப்பு அளித்து வருகிறது.

 மகராசி சீரியல்

மகராசி சீரியல்

மகராசி சீரியல் ஆரம்பமே ஹரித்துவாரின் கங்கை நதியின் நடுவில் பிரமாண்ட சிவன் சிலையை காண்பித்து, அதன் அருகில் கதையின் நாயகிக்கு இன்ட்ரோ கொடுத்து அங்கிருந்து ஒடி வருவது போல ஷாட் வைத்து இருந்தது பார்க்க நன்றாக இருந்தது. ஹரித்துவாரில் எடுத்த காட்சிகள் அனைத்துமே கலர்ஃபுல்லாக இருந்தது.

 மாஸ்டர் ராம்ஜி

மாஸ்டர் ராம்ஜி

கதையின் நாயகி பெங்களூரூவை சேர்ந்தவர் என்றாலும். இதில் பல ஹிட் லிஸ்ட் ஸ்டார்ஸ் நடித்து வந்தார்கள். வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடலுக்கு நடனம் ஆடி புகழடைந்த டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிரபல வில்லன் நடிகர் ரியாஸ்கான் இதில் வில்லனாகவே நடித்து இருந்தார்.

 நடிகர் ரகுவரன்

நடிகர் ரகுவரன்

நல்ல பர்சனாலிட்டி கொண்ட வில்லன் நடிகர் ரகுவரன் இன்று நம்மிடையே இல்லை. என்ன காரணமோ தெரியலை இவரின் புகைப்படத்தை வைத்து, கதாநாயகியின் தந்தை என்று மகராசி சீரியலில் காண்பித்து இருந்தார்கள். மேற்கொண்டு கதை எப்படி நகரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் இருக்கையில் லாக்டவுன் வந்து படப்பிடிப்பு இல்லை. பொறுத்திருந்து பார்க்கலாம், எப்படி ரகுவரன் கதாபாத்திரத்தை போட்டோவை வைத்தே நகர்த்துகிறார்கள் என்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+