என்னாது.. கலர்ஸ் டிவியின் டார்கெட் சன் டிவியா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் பின்னணி ரொம்ப பிரமாண்டமானது. நஷ்டத்தைப் பற்றி கவலைப் படாத ஒரு நிறுவனம். எவ்வளவு செலவானாலும், முயற்சித்து பார்ப்போம்.. இல்லையா அடுத்ததை முயற்சிப்போம் அப்படிங்கிற மனோ பாவம் கொண்டது..
வெற்றி வரும் வரை விடவே கூடாது.. இதுதான் கலர்ஸ் தமிழ் டிவி ஃபார்முலா. ஆரம்பித்தபோதே வரிசையாக பல சீரியல்கள். விடாமல் வெளுத்தெடுத்தனர்.
எங்க வீட்டு மாப்பிள்ளை என்று நடிகர் ஆர்யாவை வைத்து ஒரு கலக்கல் நிகழ்ச்சி வேற... டாப் லெவலில் சென்று கொண்டு இருந்த நேரத்தில் சீரியல்கள் கை கொடுக்கவில்லை.

கலர்ஸ் தமிழ் டிவி
முதலில் கலர்ஸ் தமிழ் டிவி களம் இறங்கியதே சன் டிவிக்கு போட்டி கொடுக்க வேண்டும் என்றுதான். அதனால்தான் வரிசையாக பல சீரியல்கள். ஆனாலும், சீரியல்கள் மூலம் சன் டிவியை ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதை அவர்களும் புரிந்து கொண்டனர்.

சன் சீரியல்கள்
சன் டிவியின் சீரியல்கள் வேறு ரகம்... எல்லாத்தையும் கலந்த ஒரு கூட்டு கலவையாக அதன் சீரியல்கள் இருக்கும். உசுரோட வச்சு உருக்கி எடுக்கும் டைப் சீரியல்கள் அவை. ஒரே குடும்ப பாசம், பாரம்பரியத்தை வலியுறுத்துவது, வஞ்சகம், கொடூரம் என்று எல்லாமே சன் சீரியல்களில் அளவோடு அவ்வப்போது இருக்கும்.

எந்த டிவியாலும்
சன் டிவியின் இந்த ஃபார்முலாவை கலர்ஸ் தமிழ் டிவியால் கடைப்பிடிக்க முடியவில்லை. இதனால், இந்த டிவியின் சீரியல்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால , இதற்கு மாற்று என்று சீரியல்கள் ஒளிபரப்பி வரும் விஜய், ஜீ தமிழ் டிவி சீரியல்களில் ஜெயித்துவிட்டது.

டிவி யுக்தி
இப்போது கலர்ஸ் தமிழ் டிவி புதிய யுக்தியைக் கையாண்டு வருகிறது.சன் டிவியின் பிரபலங்களை தம் வசம் இழுத்து அதன் மூலம் சன் டிவியை போட்டிக்கு இழுக்க நினைத்து செயல்பட்டு வருகிறது. அதன் முதல் படி சன் டிவியின் ராதிகாவை தங்கள் கைவசம் கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் தக்க வைத்துக் கொண்டு உள்ளது. அதோடு, சன் டிவியில் கோலோச்சி மக்கள் மிகவும் ரசித்த இமான் அண்ணாச்சியை தன் வசம் இழுத்து கட்டிப்போட்டு வைத்து இருக்கிறது.
இன்னும் யார் யாரெல்லாம் கலர்ஸ் தமிழ் டிவியின் வலையில் விழப் போகிறார்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் சூரியனை மறைக்க முடியாதுபா என்று மறுபக்கம் சன் டிவி தெம்பாகவே இருக்கிறதாம்.!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications