யாரை வேணும்னா எதுவும் பேசிடலாமா? அடக்கி வைக்க மாட்டீங்களா?
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளியின் கோமாளிகள் புகழ், பாலா செய்யும் அட்டகாசம் தாங்க முடியலை.
இதை ஏற்கனவே சுட்டிக்காட்டியும் விஜய் டிவி கண்டுக்கொண்ட மாதிரி தெரியலை.
நடிகை ரம்யா பாண்டியனை கலாய்ச்சது போக இப்போ வனிதா விஜயகுமாரை பாலா கலாய்ச்சு இருப்பது முகம் சுளிக்க வைக்குது.

ஒரு டாஸ்க்
குக்கு வித் கோமாளியில் தங்களுக்கு வரும் கோமாளியை தேர்வு செய்துக்க ஒரு டாஸ்க் வைக்கறாங்க. அப்புறம் கண்ணைக் காட்டிக்கொள்வது, கையை சேர்த்து விலங்கிட்டு கொள்வது, கோமாளிகளை மட்டும் சமைக்க சொல்வது இப்படி டாஸ்கில்தான் நிகழ்ச்சியே நடக்குது.

காமெடி இருக்கு
கோமாளிகளிடம் சமையல் நிபுணர்கள் மாட்டிக்கொண்டு விழிப்பதே நல்ல காமெடியா இருக்கு. நிஜமா இதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இதையும் தாண்டி செயற்கையாக காமெடி எல்லாம் இந்த ஷோவுக்கு தேவையே இல்லை. அதுவும் ரம்யா பாண்டியனிடம் பாலா, புகழ், ரக்ஷன் என்று மூவரும் வழிவதை ஒரு காமெடி என்று நினைத்து ஷோவை கெடுக்கிறார்கள்.

கலாய்ப்பதே கடமை
விஜய் டிவியின் காமெடி ஷோ ஃபார்முலா மாட்டினவங்களை கலாய்ப்பதே தலையாய கடமை என்பதே. எல்லா ஷோவிலும் இதை பார்த்து பார்த்து போரடித்து கூடவே எரிச்சலும் வருகிறது.குக்கு வித் கோமாளி ஷோவில் உண்மையாவே பல காமெடிகள் நம்மை அறியாமல் உதிருகிறது என்பதுதான் உண்மை.

வனிதா விஜயகுமார்
நிகழ்ச்சியில் குக்காக இருக்கும் வனிதாவுக்கு டாஸ்க் மூலமாக பாலா கோமாளியாக வருகிறார். அதற்கு பாலா சொன்ன ஒரு கமென்ட்தான் முகம் சுளிக்க வைத்துவிட்டது. புள்ளீங்கோவுல ஒண்ணு எனக்கு குக்கா வரும்னு நினைச்சால் ரெண்டு புள்ளிங்க பெத்தது குக்கா வந்து இருக்குன்னு சொல்றார்.
நிஜமா இது வரவேற்கத் தக்கது அல்ல... டூ மச் பாலா..ஒரு தாயை இப்படி கிண்டல் செய்யலாமா?
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications