ஹய்யோ ஹய்யோ.. யார் பெத்த பிள்ளையோ.. இப்படி அடி வாங்குதுங்களே...!
சென்னை: விஜய்டிவியின் குக்கு வித் கோமாளியில், இந்த கோமாளி புள்ளீங்கோ யார் பெத்த பிள்ளைங்களோ இப்படி அடி வாங்குதுங்குன்னு சொல்ற மாதிரி குக்குங்க கிட்டே அடி வாங்குதுங்க.
புகழ், பாலா, ஷிவாங்கி இவங்க மூணு பேரும் வாங்கும் அடி இருக்கே... ஐயோ பாவம்.. முரட்டு அடியா இருக்கு.. அதுகளும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமதான் இருக்குதுங்க!
இதுலேயும் இந்த புகழ், பாலா இருவரும் செ ஃப் கிட்டேயும் அடி வாங்கிக்கிட்டே இருக்காங்க. அப்போதும் கொஞ்சமும் உரைக்கலியே...! இருந்தாலும் இப்படி அடிக்க கூடாது!

நடிகை ரேகா
நடிகை ரேகாவுக்கு பாலா, புகழ், ஷிவாங்கி இவர்களில் யாராவது ஒருத்தர் கோமாளியா வந்துட்டா அவ்ளோதான் கதி. அவங்க செய்யற தப்புக்கு, கோமாளிகளாக அவர்கள் தரும் இடைஞ்சலுக்கு ரேகா டென்ஸனாகி கத்துவது ஒரு ஜாலி. போச்சு போச்சு எல்லாம் கெட்டுப் போச்சு என்று எதாவது பேசுவது ஒரு ஜாலி என்றால், மாட்டிக்கொண்ட கோமாளிகள் வாங்கும் அடி இருக்கே...ஐயோ பாவம்தான்.

தாமு வெங்கடேஷ்
நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் செஃப் வெங்கடேஷ், தாமு இவர்கள் இருவரும் சமைப்பதை பார்க்க ரவுண்டப் வருவார்கள். அப்போது புகழிடம் எதாவது கேட்டு, அவர் ஆக்சுவலி இப்போதுதான் லண்டனில் இருந்து வந்தேன்னு அலட்டிக்கொள்ள, வாய் மேலேயே வாங்குவார் பாருங்க அடி.. இடி மாதிரி இருக்கும். சொல்லுவியா சொல்லுவியான்னு கேட்டு கேட்டு அடி விழும்.

உமா ரியாஸ் பீஃப் சவுண்ட்
உமா ரியாஸுக்கு யார் கோமாளியாக மாட்டினாலும் சரி, அவங்களுக்கு அடி விழாது. வாய் என்ன கேட்ட வார்த்தைகளை உதிர்க்குதுன்னு தெரியாது. பீஃப் போட்டுவிடுவார்கள். சரியான பீஃப் பார்ட்டி.இவருக்கு கை அவ்ளோ நீளாது. பதிலாக வாய்தான் நீளும்... கொஞ்சம் அதட்டி வேலை வாங்குவாரே தவிர இவருடன் டேஞ்சரஸ் என்று ஒன்றும் கிடையாது.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமாருக்கு யார் கோமாளியாக வந்தாலும் கவலை இல்லை. அவர் நிதானமாக செய்யும் வேலையில் கவனமாக இருப்பார். கோமாளியை எப்படி வேலை வாங்குவது என்று நேக்காக வேலை வாங்கி சாதிப்பார். கையை கட்டி இருந்தாலும் டென்சன் ஆக மாட்டார். கண்களை கட்டி இருந்தாலும் டென்சன் ஆக மாட்டார்.ரொம்ப கூல் பர்சன்.. எந்த கோமாளியையும் இவர் அடித்தது இல்லை.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் இந்த ஷோவுக்கு ஒரு அட்ராக்ஷன் என்று சொல்லலாம். எல்லாருமே இவரிடம் கொஞ்சம் வழிஞ்சுதான் பேசுவார்கள். இவர் என்ன நடந்தாலும் டென்சன் ஆக மாட்டார்.சிரிச்ச முகமாக இருப்பது இவரது பிளஸ். கோமாளிகள் தப்பு செய்தால் செல்லமாக தட்டுவார் அவ்ளோதான்.மத்தபடி நோ டென்சன் பார்ட்டி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications