யாரு நான் எழுந்து நிக்கவே சிரமப்படுறேனா.. வெறும் வாயை மென்றோருக்கு ரோபோ சங்கரின் பதிலடி வீடியோ
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மெலிந்து காணப்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் அவர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அவர் பெயரை சொன்னாலே அவரது உடல் பருமன்தான் நினைவுக்கு வரும். அவர் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி, மகள் என 3 பேருமே உடல் எடை அதிகரித்தே காணப்படுவர்கள்.

தனது மிமிக்ரி திறமையால் இவர் சில திரைப்படங்களில் கூட நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் அவரது உடல் எடை மிகவும் மெலிந்து காணப்பட்டது.
இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து ரோபோ அண்ணனுக்கு என்ன ஆச்சு என பலரும் கேட்டனர். இந்த நிலையில் ஆளாளுக்கு அவர் குறித்து தவறான காரணங்களை கூறி வந்தனர். ஒரு சிலர் ரோபோ எழுந்து நிற்கவே சிரமப்படுகிறார் என்றனர். இந்த நிலையில்தான் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை இருந்து அதனால் முகம் வாட்டமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் எடை குறைப்பு என்பது கணிசமாகத்தான் குறைந்து வருகிறதே தவிர மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு ஓரேடியாக குறையவில்லை. மேலும் அவராகவ உடல் எடையை குறைத்தார் என்றும் கூறியிருந்தனர். அதாவது ஒரு படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்ததாகவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவருடைய மனைவி பிரியங்கா சங்கர் தெரிவித்திருந்தார்.
இத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் அவருக்கு குடிப்பழக்கம் அதான் உடல் எடை குறைந்துவிட்டது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றெல்லாம் சிலர் வதந்திகளை பரப்பி வந்தனர். ஒரு சில பிரபலங்களும் அவர் குறித்து தவறாக பேசி வந்தனர். இந்த நிலையில்தான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரோபோ சங்கர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் வாரணம் ஆயிரம் படத்தில் ஏத்தி ஏத்தி ஏத்தி என் ஸ்டைலை கொஞ்சம் ஏத்தி என்ற பாடலுக்கு செம எனர்ஜியாக ரோபோ சங்கர் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. அவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் அண்ணே ரெஸ்ட் எடுங்க. நீங்க டான்ஸ் ஆடித்தான் எங்களுக்கு நீங்க நல்லாயிருக்கீங்கன்னு காட்டணும்ங்கிற அவசியமே இல்லை. ஓய்வு எடுங்கள் என்கிறார்கள்.
இந்த வீடியோவை மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அவர் மீண்டு வாருங்கள் அண்ணே, நல்ல எனர்ஜி என குறிப்பிட்டுள்ளார். இவர் தனுஷ் நடித்த மாரி படத்தில் நடித்திருந்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவரது அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு காமெடி மிகவும் பிரபலம். சினிமா மட்டுமல்லாமல் இவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications