அம்மா, அப்பா, மனைவிக்கு கோவில்.. மதுரை முத்துவின் கலங்க வைக்கும் பாசக் கதை! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
மதுரை: சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் காமெடி செய்து கலக்கி வரும் மதுரை முத்து தற்போது தனது தாய் தந்தைக்கும், மனைவிக்கும் தனது பூர்வீக வீட்டின் அருகே கோவில் கட்டி வருகிறார். தற்போது கோவிலுக்கான பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், வரும் 14ஆம் தேதி மதுரை முத்துவின் அம்மா, அப்பா, மனைவிக்கு கட்டிய கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அப்போது 1200 பேருக்கு அன்னதானமும் ஏழை எளிய மக்கள் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் மதுரை முத்து. தற்போது இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் மதுரை முத்துவுக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை அருகே அரசபட்டியை சேர்ந்த மதுரை முத்து நீண்ட காலமாக காமெடி துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சிளில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவரது பிராப்பர்டி காமெடிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி இருக்கின்றனர். அதற்குப் பிறகு சன் டிவியில் அசத்தப்போவது யாரு, சண்டே கலாட்டா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து விஜய் டிவிக்கு திரும்பிய அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்பாளராகவும் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பட்டிமன்ற நடுவராகவும், நகைச்சுவை பேச்சாளராகவும், திருமணங்கள், கோவில் திருவிழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அடிக்கடி தனது சொந்த ஊருக்கு செல்வதும், உறவினர்களை சந்திப்பதும் மதுரை முத்துவுக்கு பிடித்தமான ஒன்று.
அதுமட்டுமல்லாமல் தனது மதுரை முத்து என்ற ஃபேஸ்புக் பேஜில் தனது ஊர் மற்றும் நண்பர்கள் குறித்த வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். மதுரை முத்து லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லேகாவுக்கு வையம்மாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு.. தீவிரமான காளி பக்தையாக அவர் இருந்தார். மதுரையில் நடந்த மேடை நிகழ்ச்சி ஒன்றில் முதன்முதலாக சந்தித்த நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதியினருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று கணவருக்காக சிறப்பு பூஜை செய்து மீண்டும் வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி லேகா உயிரிழந்தார். அப்போது அமெரிக்காவுக்கு சென்ற மதுரை முத்து உடனடியாக ஊர் திரும்பினார். அவரது இரு பெண் குழந்தைகளும் அம்மா எங்கே எனக் கேட்டபோது 'கோவிலுக்கு போயிருக்காங்க திரும்பி வருவாங்க' என சொல்லி சமாளித்ததாக பலமுறை அவரே பகிர்ந்து இருக்கிறார்.
இரு குழந்தைகள், வயதான பெற்றோர் என தவித்த முத்து, நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க லேகாவின் தோழியான நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் முத்து தனது சொந்த ஊரான அரசபட்டிக்கும் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். பிசியான தொழில் முறை இருந்தாலும், தனது ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் முத்து தற்போது நெகிழ்ச்சி தரும் செயல் ஒன்றை செய்திருக்கிறார்.
தனது ஊரில் இருக்கும் வீட்டில் மதுரை முத்துவின் தந்தை தாய் மனைவிக்கு கோவில் கட்டி இருக்கிறார் மதுரை முத்து. பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரை கோவில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அப்போது 1200 பேருக்கு அன்னதானம், விதவை மற்றும் முதியவர்களுக்கு வேட்டி சேலை, மாணவர்களுக்கு உடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், மரக்கன்றுகள், காலண்டர்கள் ஆகியவற்றை மதுரை முத்து வழங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மதுரை முத்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார். தற்போது இந்த அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டைப் பெற்று வருகிறது. வெறும் கோயில் திறப்போடு நின்றுவிடாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் மதுரை முத்துவை பலரும் பாராட்டி வருகின்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications