கலவரமாக மாறிய ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரி.. ரூ5000 டிக்கெட்டுக்கு ஒரு சேர் இல்லையா? ரசிகர்கள் செயல்
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சிக்கு போயிருந்த ரசிகர்கள் பலரும் அங்கிருக்கும் சேர்களை தூக்கி அடித்து பிரச்சனையை செய்திருக்கின்றனர்.

என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்திய திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் வலம் வரும் நிலையில் இவருடைய பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பை பெற்று வருகிறது. காதல், சோகம், நட்பு என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும் ஏ ஆர் ரகுமானின் பாடலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இசைத்துறையில் ஆர்வமுள்ள பலருக்கும் ஏ.ஆர் ரகுமான் பெரிய அளவில் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். இப்போது உள்ள டாப் ஹீரோக்கள் படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவரை இசைப்புயல் என்று அழைத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் ஏ ஆர் ரகுமான் சர்வதேச அளவில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு இவரது இசை நிகழ்ச்சி தற்போது தொடங்க பெற்று இருக்கிறது. அதாவது மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே சென்னையில் நடக்க இருந்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கோயம்புத்தூரில் இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அங்கு தான் திடீரென்று அங்கிருக்கும் ரசிகர்களால் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது

இசை கச்சேரியில் ரசிகர்களுக்கு சரியான இருக்கை ஒதுக்காததால் ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அங்கிருக்கும் தடுப்புகளை உடைத்து திடீரென்று ரசிகர்கள் உள்ளே நுழைந்து இருக்கின்றனர். ரசிகர்களுக்கு சரியான பாதுகாப்பும் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதே நேரத்தில் அங்கிருந்த பாடிகாட் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி இருக்கின்றனர்.
அத்தோடு அங்கிருந்த பாடி கார்டை கூட சிலர் தள்ளி வீழ்த்தியிருப்பதாகவும் சில வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது அதற்கு காரணம் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்காக ஒரு டிக்கெட் ஐயாயிரம் கொடுத்து வாங்கி இருந்த நிலையிலும் சரியாக ஒரு சேர் கூட போடவில்லை. அதனால் தான் ரசிகர்கள் கோபம் ஆகிவிட்டார்கள் என்று செய்தி பரவி வருகிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் நடந்த கலவரம் வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications