மாடிப் படிக்கு பக்கத்தில் வளைச்சு வளைச்சு.. வாவ் தர்ஷா குப்தா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராம் திறந்தாலே பக்கம் பக்கமா போஸ்ட் வருவது தர்ஷாவின் போட்டோக்களாக தான் இருக்கின்றது. இவருடைய போட்டோக்களை பார்த்து நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் சங்கங்கள் அமைத்து கொண்டாடி வருகிறார்கள். அதுவுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களையும் ஓபன் பண்ணி வருகிறார்கள்.

தர்ஷாவின் ஒரு போஸ்ட் வெளியானதும் அதை அப்படியே பரப்பி வைரலாகி வருகிறார்கள். அந்த மாதிரி தான் தீபாவளிக்கு பிறகு புது விதமாக களமிறங்கியிருக்கும் தர்ஷாவின் லேட்டஸ்ட் போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது.

அம்மனே வந்தது போல

அம்மனே வந்தது போல

கையில் விளக்கை ஏந்தி அந்த அம்மனே நேரில் வந்தது போல அழகாக எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் களால் பூஜித்து வருகிறார்கள். இதுவரைக்கும் பல விதமாக பல மாடல்களில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும் தற்போது எடுத்திருக்கும் போட்டோஸ்கள் தர்ஷாவா இது என்று ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது.

செம செம

செம செம

அந்த அளவிற்கு படு பயங்கரமாக அப்படியே கேரக்டராக மாறிவிட்டார். இவருடைய தற்போதைய போட்டோவை பார்த்து மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவை விடவும் அழகாக இருக்கிறீர்கள். பேசாம நீங்களே அந்த படத்தில் நடித்திருக்கலாம் என்று இவருக்கு கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். தர்ஷாவும் இதற்கு புன்னகை கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளார்.

வழிந்து தள்ளும் ரசிகர்கள்

வழிந்து தள்ளும் ரசிகர்கள்

சும்மாவே உருகும் இவருடைய ரசிகர்கள் இந்த மாதிரி இவரை பார்த்ததும் சும்மா இருப்பார்களா. இப்போதும் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள் .அந்த மாதிரிதான் அடிக்கடி இவருக்கு கவிதைகளை அனுப்பும் ரசிகர் இப்போதும் ஒரு கவிதையை பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார். கவிதையைப் படித்தாலே புல்லரிக்குது.. அப்படி எழுதியிருக்கிறார் அவர்.

ஓவியனும் தயங்குவான்

ஓவியனும் தயங்குவான்

'பெண்ணே ஓவியனும் வரைய தயங்குவான் ஒளிவீசும் உன் முகத்தை கண்ட பின்பு.. பாடலாசிரியரும் பைத்தியமாவான் உன் பார்வையில் விழுந்தால், வார்த்தைகள் இருந்தும் வர்ணிக்க முடியாது உன் வட்ட முகத்தை கண்டால், பூக்களும் வாசம் வீச மறுக்கும் உன் சுவாசிக்கும் அழகினை கண்டால், மலர்களும் மலர தயங்கும் உன் மைவிழி கண்டால், பாதைகள் எல்லாம் பார்த்து ஏங்கும் நாணமும் நளினம் ஒன்று சேர்ந்த நீ நடந்து வரும் அழகை காண என்று அப்படியே வர்ணித்து தள்ளியிருக்கிறார்.

சேலையில ஒரு சோலை

சேலையில ஒரு சோலை

அதுமட்டுமல்லாமல் எல்லா பெண்களும் உன்னை போல அழகு இல்லையே தர்ஷா.. சேலையே உங்களுக்காக கண்டுபிடித்தது போல இருக்கிறது என்றும் ஐஸ் வைத்தும் வருகிறார்கள். இவர் எத்தனையோ போட்டோக்களில் புடவை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்து இருந்தாலும் தற்போதைய போட்டோஸ்கள் தான் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருக்கிறதாம் .

ஆவாரம்பூ காட்டுக்குள்

ஆவாரம்பூ காட்டுக்குள்

அதுவும் கண்மூடி பார்க்கும்போதும் ரசிகர்களுக்கு இந்த போட்டோ தான் நினைவு வருகிறது .அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டதாம். அதுமட்டுமல்லாமல் ஆவாரம்பூ காட்டுக்குள் கையில் ஆவாரம் பூவை வைத்து இவர் அப்படியே சாட்சாத் அந்த அம்மனைப் போலவே இருக்கிறாராம். வணங்கி வழிந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

மாடிப்பட்டிக்குப் பக்கத்தில்

மாடிப்பட்டிக்குப் பக்கத்தில்

அதேபோல அவர் சேலையில் போட்டுள்ள இன்னொரு போஸ் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளது. மாடிப் படிக்குப் பக்கத்தில் ஒயிலாக காட்சி தருகிறார் தர்ஷா. பார்க்கவே அந்த போஸ் பரவசத்தை கிளப்பி விடுவது போல இருக்கிறதாம் ரசிகர்களுக்கு. இருந்தாலும் விடாமல் பார்த்து துடித்துக் கொண்டுள்ளனர். அதேபோல சுவரில் அவர் சாய்ந்து நிற்கும் ஸ்டைலும் செமையாக இருக்கிறதாம். ஜொள்ளு ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+