கண்ணை கட்டியும்... வாயை கட்டியும்.. என்ன கொடுமைடா இது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ரொம்ப கொடுமை பண்றாங்க. இப்படியும் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாமா?

நல்லா கத்துக் கொடுக்கறாங்க.. விஜய் டிவி. கேட்டால் பெயர் அதுதானே வச்சு இருக்கோம்னு சொல்வாங்க. .

ஆனால், பெயருக்கு ஏற்ற மாதிரி குக்கு வித் கோமாளிதாங்க!.நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துக்கிட்டு இருக்காங்க.

 சமைப்பவர்கள் கண்களை

சமைப்பவர்கள் கண்களை

சமைப்பவர்கள் கண்களை கட்டிக்கொண்டு கோமாளிகளிடம் சமைக்க நினைக்கும் டிஷுக்கு தேவையான பொருட்களை எடுத்து வர சொல்ல வேண்டும். அடுத்து அவர்களை வைத்தே பொருட்களை வைத்து அடுப்பில் சேர்த்து சமைக்க வேண்டும்.

நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியனுக்கு கோமாளியாக வந்தவர் பாவம் அவர் கண்களை மூடிக்கொண்டு மூன்று மூன்று பொருளாக சொல்லலாம் என்று யோசித்து சில்லி பவுடர் என்று சொல்வதற்குள் ஓடிவிட்டார். அவர் மீதி பொருட்களை சொல்லி முடிப்பதற்குள் அங்கு ஆள் இல்லை. ஒரே காமெடியாக இருந்தது.

தாடி பாலாஜிக்கு

தாடி பாலாஜிக்கு

நடிகர் தாடி பாலாஜிக்கு உதவியாக இருந்தவர் கண்களை கட்டிக்கொண்டு சமைத்துக் கொண்டு இருந்த வனிதா விஜயகுமாரின் கோமாளி கர்மமே கண்ணாக அடுப்பில் இருந்ததை கிளறிக்கொண்டு இருக்க, அவர் துருவி வைத்து இருந்த தேங்காய் துருவலை திருடிகொண்டு தாடி பாலாஜியிடம் கொடுத்து விட்டார்.

வாயைக் கட்டிக்கொண்டு

வாயைக் கட்டிக்கொண்டு

இந்த எபிசோடில் வாயைக் கட்டிக்கொண்டு சைக்கிளில் கோமாளிக்கு சமைக்க சொல்லித் தர வேண்டுமாம். கோமாளிகள் செய்யும் அட்டகாசம் தங்க முடியவில்லை. பாவம் சமையல் நன்றாக தெரிந்தும் இவர்கள் படும் பாடு இருக்கிறதே ஐயோ பாவம்!

ரம்மாய பாவம்யா

ரம்மாய பாவம்யா

இதை விட என்ன கொடுமை என்றால் நடிகை ரம்யா பாண்டியனை ஒரு செக்ஸ் பொம்மை போல பார்ப்பதுதான்.. எப்படி இவர்களால் ஒரு பெண்ணை அந்தக் கோணத்தில் மட்டுமே பார்க்கத் தோன்றுகிறது என்று தெரியவில்லை. அவரும் அவர்கள் செய்யும், பேசும் செயல்களுக்கெல்லாம் சிரித்து சமாளித்து வைக்கிறார்.. தலையில்தான் அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+