CWC Pugazh: தகதகனு எரியும் நெருப்பு! தீ குண்டத்தில் சூலாயுதத்துடன் இறங்கிய குக் வித் கோமாளி புகழ்!
சென்னை: கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளால் பிரபலமடைந்த புகழ், ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மனுக்கு தீமிதி திருவிழா, கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு காமெடியில் கலக்கியவர் புகழ். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்தார். இதற்கு முதலில் இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து குக் வித் கோமாளி சீசனில் கோமாளியாக மக்களை மகிழ்வித்து வருகிறார். நடிகைகள் ரம்யா பாண்டியன், பவித்ரா லட்சுமி, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோருடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்தார். தற்போது 6ஆவது சீசனில் ஷபானாவுடன் காமெடி செய்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. சபாபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கினார். இதைத் தொடர்ந்து என்ன சொல்ல போகிறாய் படத்தில் முழு நீள காமெடியனாக நடித்திருந்தார்.
வலிமை படத்திலும் அஜித்துடன் ஒரு சீனில் நடித்திருந்தார். தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அண்மையில் வெளியான டீசல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விலங்கியல் பூங்காவில் பாதுகாவலராக நடித்திருக்கிறார்.
படத்தில் அனிமேஷன் இல்லாமல் உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ், தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மிஸ்டர் ஜூ கீப்பர் படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தது. இந்த படம் புகழின் Career-ல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு புகழ், கடலூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து பொங்கல் வைத்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருக்கும் அவர் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார். இதுதொடர்பான வீடியோவை நடிகர் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஆண்டவா எல்லாரும் எப்பவும் மனநிம்மதியோட, எந்த தொந்தரவும் இல்லாம சந்தோஷமா இருக்கனும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பென்சி ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிதன்யா என மகள் உள்ளார். 11 மாத குழந்தையாக இருந்த ரிதன்யா 2 கிலோ தம்பெல்லை 17 வினாடிகள் தூக்கியிருந்ததாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications