முதலில் நிலா காயுது...அடுத்து கட்டிப்புடி கட்டிப்புடி...என்ன பாண்ணுவாங்க பாவம்!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில், கோமாளிகள் காதில் ஹெட்செட்டை மாட்டிவிட்டு, சத்தத்தை ஏகத்துக்கும் எகிற வைத்து இருந்தார்கள்.
குக்குகள் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பாவம் கோமாளிகளுக்கு புரியவே இல்லை. கத்தி கத்தி சொன்னாலும் கேட்கலை...கட்டிப்புடி கட்டிப்புடி பாட்டு ஓடுது.. அதை ரசித்து முடித்தால் நிலா காயுது...பாவம் கோமாளிகள்தான் என்ன செய்வார்கள்?
இடையில் இந்த பாடல் காதை விட்டு எகிறி அறைக்குள் எங்கு பார்த்தாலும் கேட்டால், பாவம் குக்குகள்தான் என்ன செய்வார்கள்? இப்படியாக செம ஜாலியா போகுது குக்கு வித் கோமாளி ரியாலிட்டி ஷோ.

குக்கு வித் கோமாளி
விஜய் டிவி ஆரம்பித்த புதிதில் இந்த ஷோ எப்படி இருக்குமோ..வரவேற்பு கிடைக்குமோ என்று கொஞ்சம் அச்சத்தில்தான் இருந்தது. எப்போதுமே விஜய் டிவி புது ஷோவுக்கு அவ்வளவா மெனக்கெடல் கிடையாது. ஸ்டார் டிவியில் என்னென்ன கான்செப்ட் புதிதாக இருக்கிறதோ, அதை இங்கு ஸ்டார் விஜயில் அப்ளை செய்து ஹிட்டாக்கி விடும்.

சூப்பர் ஹிட் ஷோ
அப்படித்தான் குக்கு வித் கோமாளி ஸ்டார் விஜயில் ஒளிபரப்ப ஆரம்பித்தபோது ஷோ சூப்பர் ஹிட்டானது. விஜய் டிவியின் நகைச்சுவை ஷோ லிஸ்டில் குக்கு வித் கோமாளியும் இடம்பெற்றது கூட விஜய் டிவியே எதிர்பாராத ஒன்றுதான். குக்குகளை விட கோமாளிகளை தேர்ந்தெடுத்து இருந்ததில் விஜய் டிவிக்கு ஒரு சபாஷ் போடலாம்.

கோமாளிகள் இல்லாமல்
கோமாளிகள் இல்லாமல் இந்த ஷோ இவ்வளவு ஹிட்டாகி இருக்காது. அதே சமயம் ஷோ நடத்த போடப்பட்டு இருந்த செட் மிகவும் பிரமாண்டம். யார் எது பேசினாலும் கேட்ச் பண்ணும்படியான கேமிராக்கள் என்று அசத்தி இருந்தது குக்கு வித் கோமாளி ஷோ டெக்னீஷியன்ஸ் குழு. ஒரு செக்மென்ட்டில் கோமாளிகளுக்கு ஹெட்செட் மாட்டிவிட்டு, அதில் பாடலை வெகு வேகமாக ஒலிக்க விட வேண்டும்.

கட்டிப்புடி நிலா காயுது
கட்டிப்புடி பாட்டு போட்டபோது, பாலா பட்டை கேட்டுக்கொண்டே பாலாஜியின் பேச்சை கேட்காமல் அவரிடம் பொளேர் என்று அடி வாங்கினார். நிலா காயுது பாடலை கேட்டுக்கொண்ட இருந்த புகழ், உமா ரியாஸ் எடுத்து வர சொன்ன பவுலை தவிர்த்து வேறு சைஸ் பவுல் எடுத்து வந்து திட்டு வாங்கினார். புகழ் கூடவே நிலா காயுது பாடலை கேட்ட உமா..சீ என்று சொல்லும் வரை பாடி நல்ல பாட்டு இல்லே என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications