வா.. காந்தாரா பஞ்சுருளியான குக் வித் கோமாளி புகழ்.. மேக்கப் போட 4 மணி நேரம்.. இன்ஸ்டாவில் வீடியோ
4 மணி நேரமாக மேக்கப் அணிந்து கொண்டு காந்தாரா கெட்டப்பில் குக் வித் கோமாளிக்கு வந்த புகழ்
சென்னை: 4 மணி நேரமாக மேக்கப் அணிந்து கொண்டு காந்தாரா பஞ்சுருளி கெட்டப்பில் நடிகர் புகழ் குக் வித் கோமாளி ஷோவுக்குள் வந்தார். இது ரசிகர்களிடையே பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 4 கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் கோமாளிகள் செய்யும் அரட்டையை ரசிக்கவே இந்த நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள். இதுவரை 3 சீசன்களை கடந்து நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, குரேஷி, மணிமேகலை, சுனிதா, டைகர் தங்கதுரை உள்ளிட்டோர் காமெடி செய்து மக்களை சிரிப்பில் ஆழ்த்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரக்ஷன்.

சீசன் 4
தற்போது 4ஆவது சீசனில் விசித்ரா, ஷெரின், மைம் கோபி, காளையன், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் அய்யப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஆன்டிரியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 10 போட்டியாளர்களில் கடந்த வாரம் இயக்குநர் கிஷோர் குமார் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ஷன் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்போது புதிய குக்காக சிவாங்கியும் புதிய கோமாளியாக ஜிபி முத்துவும், சிங்கப்பூர் தீபனும் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய காரணம்
இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமே கோமாளிகள்தான். ஒரு சீசன் முடிந்ததும் அடுத்த சீசன் எப்போ என கேட்டு கோமாளிகளையும் செஃப் பட்டையும் ரசிகர்கள் அன்பு தொல்லை கொடுக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் சினிமா வாய்ப்பையும் பெற்றுள்ளார்கள். அதில் ஒருவர் புகழ். பரட்டை தலை, சுருள் முடியும் இவர் செய்யும் அட்டகாசம் சில நேரங்களில் சிரிப்பையும் சில நேரங்கள் பெண்களை கலாய்க்கும் போது ரசிகர்களுக்கு ஒரு வித சலிப்பையும் ஏற்படுத்தும்.

குக் வித் கோமாளி
அந்த வகையில் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், காந்தாரா படத்தில் வரும் பஞ்சுருளி கெட்டப்பில் வந்து காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரின் அந்த கெட்டப்பா தத்ரூபமாக இருந்ததை பார்த்து அங்கிருந்த குக்குகளும் ,கோமாளிகளும் ஜட்ஜ்களும் கலங்கினர். இந்த கெட்டப் போட 4 மணி நேரம் ஆனதாம். இது குறித்த வீடியோவையும் புகழ் வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டா பதிவில்
அந்த இன்ஸ்டா பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்... இவ்வாறு புகழ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

கெட்டப் போட்ட வீடியோ
மேலும் இந்த கெட்டப்பிற்கு மேக்கப் எப்படி போடப்பட்டது என்ற வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். சிவப்பு நிற ஜிப்பா அணிந்து கொண்டு காந்தாரா பஞ்சுருளி போல் மேக்கப் அணிந்து கொண்டு செட்டுக்குள் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் காந்தாரா கெட்டப்பில் புகழ் வந்ததும் செட்டே தெய்வீக மயமாக காட்சியளித்தது. மேலும் ரிஷப் ஷெட்டியை போல் சில நடன அசைவுகளையும் அவர் மேற்கொள்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் போதே புல்லரிக்கிறது. உண்மையில் புகழின் டெடிகேஷனே டெடிகேஷன்தான் என பாராட்டுகள் குவிகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications