10 ஆண்டுகள் கழித்து.. தொகுப்பாளினியாகிறாரா குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்?
சென்னை: குக் வித் கோமாளி சீசனின் டைட்டில் வின்னர் தொகுப்பாளினியாக அவதாரம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 3 சீசன்கள் முடிந்துள்ளது. 4ஆவது சீசன் எப்போது தொடங்கும் என ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை செஃப் தாமுவும் வெங்டேஷ் பட்டும் நடுவர்களாக இருந்து நடத்தி வைத்தனர்.
குக்குகளும் கோமாளிகளும் செய்யும் லூட்டியே இந்த நிகழ்ச்சி வெற்றியடைய காரணமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்து வயிறு குலுங்க சிரிப்பதால் மனம் நிம்மதி அடைந்து சோர்வு நீங்குகிறது என ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

15 போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் சுமார் 22 வாரங்கள் அதாவது 6 மாதங்கள் வரை நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேஷன் ஆகிக் கொண்டே இருப்பார். கடைசியாக 6 பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகி செல்வர். அவர்களில் யார் நன்றாக சமைத்து நடுவர்களிடம் அதிக மதிப்பெண்களை வாங்குகிறார்களோ அவரே வெற்றியாளர் ஆவார்.

குக் வித் கோமாளி
அந்த வகையில் குக் வித் கோமாளியின் முதல் டைட்டில் வின்னர் வனிதா விஜயகுமார். இரண்டாவது சீசனின் வின்னர் கனி. இவரை காரக் குழம்பு கனி என்றே நகைச்சுவையாக அழைப்பதுண்டு. அந்த நிகழ்ச்சியில் திரையில் தோன்றிய ஏ.ஆர். ரஹ்மானும் காரக்குழம்பு கனி என்றே அழைத்தார். இவர் தற்போது யூடியூப்பில் சமையல் கற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆடை வடிவமைப்பாளர்
கனி ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார். இரு பெரும்பாலானோருக்கு தெரியாது. சன் டிவியில் புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்று தொடங்க போகிறார்களாம்.

தொகுப்பாளினி
இதில் கனி தொகுப்பாளினியாக களம் இறங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. இவரது கணவரும் சினிமா துறையில் இருக்கிறார். இவரது தந்தை இயக்குநர் அகத்தியன். இவர் சர்வைவர் வின்னர் விஜயலட்சுமியின் மூத்த சகோதரியாவார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications