சிவாங்கி கண் முழுக்க கண்ணீர்.. எல்லாத்துக்கும் காரணம் குக் வித் கோமாளிதான்.. உருக்கம்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மரண படுக்கையில் இருந்த ஒரு ரசிகரின் தாய் காப்பாற்றப்பட்டு உயிரோடு இருக்கிறார் என்ற தகவலை கேட்ட புகழும் சிவாங்கியும் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
துன்பம் வரும் போது சிரிங்க என்பார்கள். அப்படி சிரிப்பதால் துன்பம் விலகி ஓடும் என்பது நம்பிக்கையாகும். இதனால்தான் சினிமாக்களில் கூட காமெடி கதாபாத்திரங்கள் இருந்தன. கூலித் தொழில் செய்துவிட்டு சினிமா தியேட்டருக்குள் சென்றால் போதும் மக்கள் சிரித்து மகிழ்வர்.
தற்போது மக்களை மகிழ்விக்கிறது டிவி நிகழ்ச்சிகள். அதில் முக்கியமானது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரு சீசன்கள் முடிந்துள்ளன. இதில் புகழ், பாலா, மணிமேகலை, ஷரத், சிவாங்கி உள்ளிட்டோர் காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்தனர்.

குக் வித் கோமாளி 3
இதனால் குக் வித் கோமாளியின் 3ஆவது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி இந்த நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

கேலி கிண்டலுடன் லூட்டி
இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பயங்கர கேலி கிண்டலுடன் லூட்டி அடித்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான கெட்டப்பில் வந்து கலக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர்களின் நடிப்பு உள்ளது.

சிரிப்பு
நொடிக்கு நொடி சிரிப்பை வரவழைக்கிறார்கள். அதிலும் புகழ் பாடி லேங்குவேஜில் அசத்துகிறார். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. எந்த வேலை இருந்தாலும் இந்த இரு தினங்களில் 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஆஜராகிவிடுகிறார்கள் நம் மக்கள். இது பார்ப்போர் தங்கள் கஷ்டங்களை மறப்பதாக சொல்கிறார்கள்.

குக் வித் கோமாளியின் தீவிர ரசிகர்
இந்த நிலையில் குக் வித் கோமாளியின் தீவிர ரசிகர் ஒருவர் தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த தனது தாய், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சி
இதனால் தற்போது தனது தாய் உயிருடன் இருக்கிறார் . தனது தாய் இன்று உயிரோடு இருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் குக் வித் கோமாளிதான் என அவர் வீடியோ பகிர்ந்துள்ளார். இதுகுறித்து செஃப் வெங்கடேஷ் பட் கூறுகையில் சிரிக்க வைப்பது கடவுளுக்கு சமம். எத்தனை பேர் ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சியை பார்த்து சிரித்து கவலையை மறக்கிறார்கள். நாம் சிரிப்போம், சிரிக்க வைப்போம், சந்தோஷமாக இருப்போம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிவாங்கியும் புகழும் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications